ஒரு புகைப்படத்தால்....ஒரே நாளில் ஓஹோன்னு உலகம் முழுவதும் பிரபலமான பெண்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி, முதல் முறையாக துபாய்-க்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார்.

அமீரக துணை அதிபரும், ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.

பின்னர், அங்கிருக்கும் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்தித்து உரையாற்றியுள்ளார்.

துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அதில் இந்தியர்களிடையே உரை நிகழ்த்தினார். அதைக் கேட்க, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கூடி இருந்தனர் .

துபாய் விமான நிலையத்தில் ராகுலை காண கூட்டம் முண்டியடித்தது. பலர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அதில் ஒரு பெண் செல்ஃபி எடுத்தார். அவர் செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் ராகுல் காந்தி பதிந்திருந்தார்.

இதனால் அந்தப் புகைப் படம் வைரலாகி, பல்வேறு பத்திரிகைகளில் அந்தப் புகைப்படம் இடம்பெற்றதால் அப்பெண் உலகம் முழுவதும் பிரபலமானார்.

கேரள மாநிலம் காசர்கோ டைச் சேர்ந்த ஹாசின் அப்துல்லா என்பவர் தான் அப்பெண். துபாயில் வசித்து வரும் அவர், அங்கு ’எவர்கிரீன் ஈவன்ட்ஸ்’ என்ற நிறு வனத்தை நடத்தி வருகிறார்.

தனது புகைப்படம் வெளியானதில் இருந்து போன் சத்தம் ஓயவில்லை. தொடர்ந்து ஏகப்பட்ட அழைப்புகள். ஒரே நாளில் இவ்வளவு பிரபல மாவேன் என நினைக்கவில்லை என்று பகிர்ந்துள்ளார் ஹாசின்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers