கனடா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்: எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபியா

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான தடையை நீக்க முடியாது என சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவரை கட்டார் நாடு மீதான தடை நீடிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சவுதி, ஐக்கிய அமீரகம், பஹரின், எகிப்து ஆகிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் கனேடிய அரசு மேற்கொண்ட விமர்சனம் பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல விரோதத்தை ஏற்படுத்தும்வகையில் அமைந்திருந்தது எனவும் சவுதி வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா ஒரு மதிப்புமிக்க நாடு என கனேடிய அரசு கருதுகிறது எனில் உடனடியாக இதுவரை எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு பெண் சமூக ஆர்வலர்களை சவுதி அரேபியா அரசு சிறையில் தள்ளிய விவகாரத்தில் தலையிட்ட கனடா அரசு, கடந்த ஆகஸ்டு மாதம் சவுதி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது.

இதனையடுத்து சவுதி அரேபியா கனடா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததுடன், விமான போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளையும் ரத்து செய்தது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்