கடைசியாக சிக்கன் பிரியாணி! இளைஞரின் வயிறு முழுமையாக அகற்றம்

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

துபாயை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவரது வயிற்றுப்பகுதி முழுவதுமாக அகற்றப்படவுள்ளதால் அவர் கடைசியாக தனது மனைவி சமைத்துகொடுத்த சிக்கன் பிரியாணியை சாப்பிட்டுள்ளார்.

குலாம் அப்பாஸ் என்ற இளைஞருக்கு வயிற்றில் புற்றுநோய் இருந்தது. இதற்காக அவர் துபாயில் உள்ள ரஷித் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கவே, வயிறு முழுவதையும் அகற்றுவது நல்லது என மருத்துவர்கள முடிவு செய்தனர்.

வயிற்றில் பெரிய கட்டி உருவாகியுள்ளது. அந்தக் கட்டி கிட்டத்தட்ட அவரின் வயிற்றையே அடைத்துவிட்டது. இதனால், வயிற்றை முற்றிலும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அவரின் எடை வெகுவேகமாக குறைந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் பரிசோதித்தபோது புற்றுநோய் முற்றியிருப்பது தெரியவந்தது.

வயிறு அகற்றப்படுவதற்கு முன், அவருக்கு கடைசியாக தனக்குப் பிடித்த சிக்கன் பிரியாணி சாப்பிட அனுமதிக்க வேண்டுமென்று மருத்துவர்களிடம் குலாம் அப்பாஸ் கேட்டுக்கொண்டார்.

அதன்படி, தனது மனைவி சமைத்துக்கொடுத்த சிக்கன் பிரியாணியை சாப்பிட்டுள்ளார். வயிறு அகற்றப்பட்ட பிறகு அப்பாஸ் எதிர்கொள்ளப் போகும் வாழ்க்கை கடினமாக இருக்கும், அவர் திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும் என லேப்ரோஸ்கோபி நிபுணர் அலி கம்மாஸ் கூறியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்