கூரையை பிரித்து கொடுத்த துபாய் லோட்டரி: எத்தனை கோடி தெரியுமா?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாய் லோட்டரியில் இந்தியர்களில் ஒருவர் ரூ.6.8 கோடியும், மற்றொருவர் பி.எம்.டபிள்யூ காரும் வென்றுள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லோட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. பரிசாக கிடைக்கும் பொருளோ, பணமோ அதற்கு வரி இல்லை என்பதால், அமீரகத்தில் இந்த லோட்டரிக்கு வரவேற்பு அதிகம்.

இந்நிலையில், குவைத்தை சேர்ந்த இந்தியரான சந்தீப் மேனன் என்பவருக்கு லோட்டரியில் ரூ.6.8 கோடி ஜாக்பாட் கிடைத்துள்ளது.

வாழ்க்கையில் என்னைக்குமே எதையும் ஜெயிச்சது கிடையாது. ஆனால், இப்போது லோட்டரியில் பணம் ஜெயித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார் சந்தீப் மேனன்.

மற்றொரு இந்தியரான சாந்தி போஸ் என்ற பெண், பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வென்றுள்ளார். 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லோட்டரியில் இதுவரை 132 இந்தியர்கள் பரிசு வென்றுள்ளதாக உள்ளூர் நாளிதழ் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில், கேரளாவை சேர்ந்த இந்தியர் தாய்நாட்டுக்கு கிளம்பும் நேரத்தில் சுமார் 6 கோடி ரூபாய் பரிசாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers