45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்
45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

சிரியா, ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகிறது.

இவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இதில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கூட்டுப்படை அதிகாரி கூறியதாவது, ஐஎஸ் அமைப்பானது 25000 கி.மீ பரப்பளவை இழந்துள்ளது. இதில் ஈராக் 50 சதவீதமும் , சிரியாவில் 20 சதவீதமும் அடங்கும்.

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படை பல்வேறு தாக்குதல்கள் நடத்தியதில், கடந்த 11 மாதத்தில் 25000 பேரும், அதற்கு முன்பாக 20000 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments