ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

Report Print Nalini in மருத்துவம்

ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும்.

சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள். உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது சிறந்தது.

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன் வெ‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம்.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை. ’தினம் ஒரு முட்டை’ உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

புரதச்சத்து அதிகம் நிறைந்த முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா என்பது குறித்து பார்ப்போம்.

காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான உணவுப் பொருளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

அதற்கு தினசரி ஒரு முட்டை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முட்டையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. புரோட்டீன், விட்டமின்கள் நிறைந்த முட்டையை அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

  • முட்டையில் உள்ள புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் எலும்புகள், மற்றும் பற்களுக்கு அதிக வலிமையை சேர்க்கிறது.
  • முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் போன்றவை கண் புரை போன்ற கண்கள் தொடர்பான நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
  • நம் அன்றாட உணவில் தினம் ஒரு முட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.
  • ஆய்வின் மூலம் ஒரு வாரத்திற்கு ஆறு முட்டைகளை சாப்பிட்டால், ரத்தத்தின் அளவு ஒரே நிலையில் இருக்கும் என்பதை கண்டுபிடிக்கப்பட்டன.
  • கெட்ட கொழுப்புகள் மூலம் நம் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் முட்டையில் உள்ள நல்ல கொழுப்புகள் எவ்விதமான உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தாது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்