இனி தலைபாரம், தலைவலிக்கு மாத்திரைகள் தேவையில்லை! இந்த கை வைத்தியங்களே போதும்

Report Print Kavitha in மருத்துவம்

பொதுவாக எல்லோருக்கும் தலைவலி வரும் இயல்பு தான். இது பல காரணங்களால் ஏற்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது.

குறிப்பாக தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் வருவதால், அடிக்கடி நீர்கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகின்றது.

தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும்.

தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. இதனால் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும்.

இதிலிருந்து விடுபட சில கைவைத்தியங்கள் உதவி புரிகின்றது. அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

shutterstock

  • காலை எழுந்ததும் சுக்குவை இழைத்து தலையில் பற்று போட்டால் மண்டையில் இருக்கும் நீரை இழுக்கும். தலைவலி வந்தாலும் இந்த பற்று போடுவது உண்டு. கை மருத்துவத்துக்கு கை கண்ட மருந்து சுக்கு என்பது பொருத்தமாக இருக்கும்.

  • 5 டீஸ்பூன் தனியாவை 30 நிமிடங்கள் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து பற்று போடலாம். இவை இறுக்கி பிடிக்க பிடிக்க மண்டயை சுற்றி இருக்கும் நீரை இழுக்கும் தன்மை கொண்டது.

  • கொத்துமல்லித்தழையை நீர்விடாமல் அரைத்து சாறு பிழிந்து தலையில் பற்று போடலாம். மாலை வேளையில் இந்த பற்று போடலாம். இரவு நேரங்களிலும் தனியாவிதைகள் போடலாம்.

  • கருப்பு வெற்றிலையுடன் கற்பூரம் சேர்த்து நன்றாக மைய அரைத்து சற்று தளர்வாக்கி பற்று போடலாம். சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும் அவ்வபோது இந்த பற்று போடலாம். இவை தலைவலியின் தீவிரத்தை கட்டுப்படுத்தகூடியது.

  • யூகலிப்டஸ் இலைகள் கிடைத்தால் அதை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து வேப்பிலை, புதினா, துளசி கற்பூர வல்லி இலைகளையும் தலா 10 சேர்த்து ஆவிபிடிக்க வேண்டும். ஆவி பிடித்த பிறகு இரண்டு நாளில் உள்ளிருக்கும் சளி அனைத்தும் வெளியேறிவிடும். சளியை இளக்கி வெளியேற்றும்.

  • நல்லெண்ணெயை இலேசாக சூடுபடுத்தி அதனுடன் தும்பைப்பூ சாறு சேர்த்து தேய்த்துவந்தால் எண்ணெய் குளியலால் குறைபாடு நேராது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்