ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ!

Report Print Kavitha in மருத்துவம்

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான பயனுள்ள மருத்துவ குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.

  • செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத் தேய்த்துக் கொள்ளவும். சற்று ஊறவிட்டுக் குளிக்கவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடி பட்டுப்போல் மிருதுவாகிக் கருகருவென்றிருக்கும்.

  • ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி பறந்து போய்விடும்.

  • ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளைச் செடியின் பூவைப் பறித்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால், நோயின் தொந்தரவு குறையும்.

  • உடல் பருமனை குறைக்க இரவு ஒரு டீஸ்பூன் ஓமத்தை ஊறவைத்து, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறைய ஆரம்பிக்கும்.

  • பொடித்த படிகாரத்தை கொண்டு வாரம் மூன்றுமுறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கு நன்கு வலு கொடுக்கும்.

  • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.

  • சீயக்காய் அரைக்கும்போது வேப்பிலையையும் கடுக்காயையும் போட்டு அரைத்து தலைகுளிக்க உபயோகித்தால் பேன் தொல்லை இருக்காது.

  • வெங்காயத்தை நன்கு ஊறவைத்து அரைத்து தலை முடியின் வேர்க்கால்களில் தடவி வைத்திருந்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளர்வதுடன், கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

  • தலைமுடி பளபளப்புடன் இருக்க முட்டையின் வெள்ளைக் கருவில் ஒரு முழு எலுமிச்சம்பழ ஜூஸை மட்டும் பிழிந்து தலைக்குத் தடவி பத்து நிமிடம் ஊறியபின் ரெகுலராக உபயோகிக்கும் ஷாம்பு போட்டு குளித்தால், தலைமுடி பளபளப்பாக மாறும்.

  • உருளைக்கிழங்கு பொறியல் செய்யும் போது சீரகத்துடன் கொஞ்சம் ஓமத்தையும் சேர்த்து சமைத்தால் வீடே மணக்கும். எளிதில் செரிக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...