சிறுநீரக கற்களை இயற்கை முறையில் கரைக்க வேண்டுமா? இதோ எளிய பாட்டி வைத்தியம்

Report Print Kavitha in மருத்துவம்

கற்கள் என்பன மிகவும் திண்மை வாய்ந்த படிகங்களாகும். இவை சிறுநீரகங்களுக்குள் உருவாகும் அல்லது சிறுநீர் செல்லும் பாதையில் உருவாகும்.

இது சிறுநீரகப் பாதையை நோக்கி நகரும் போது அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

திடப்பொருளாக மாறக்கூடிய பொருட்கள் சிறுநீரகத்தில் கற்களாக மாறுகின்றன.

இப்படி கற்கள் சிறுநீரகத்தில் சேர்வதற்கு ஒருவரது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் காரணமாக அமைகின்றது.

இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது மிகவும் நல்லதாகும். இல்லாவிடின் பல பக்கவிளைவுகளை பின்னடைவில் ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் தற்போது கற்களை கரைக்க கூடிய இயற்கை வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வாழைத்தண்டை வாரம் 2 முறை உணவில் சமைத்து சாப்பிட்டுவர சிறுநீரக கற்கள் கரையும்.
  • துளசி சாற்றில் தேன் கலந்து சாப்பிட சிறுநீரக கற்கள் கரையும்.
  • முருங்கை வேர்பட்டை கஷாயம் செய்து சாப்பிட்டுவர சிறுநீரக கற்கள் கரையும்.
  • சிறுபீளை, நெருஞ்சில், நீர்முள்ளி, மூக்கிரட்டை சேர்த்துக் கஷாயம் செய்து பருகிவர சிறுநீரக கற்கள் கரையும்.
  • எருக்கம் மொட்டு 7,வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு சேர்க்காமல் 2,3 வேளை சாப்பிட கல்லடைப்பு நீங்கும்.
  • வெறும்வயிற்றில் அத்திப்பழங்களை அதிகம் உண்டுவர நீர்ப்பையிலுள்ள கற்கள் நீங்கும்.
  • அன்னாசிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டுவர கற்கள் கரையும்.
  • சிறிய வெங்காயத்தை விழுதாக அரைத்து 100கிராம் தினம் உண்டுவர கற்கள் கரையும்.
  • கொள்ளு அவித்தநீரை தினம் 2வேளை அருந்திவர கற்கள் கரையும்.
  • 50 கிராம் உலர்ந்த திராட்சையை 150மிலி நீரில் கரைத்து வடிகட்டி,100மிலி பால் கலந்து பருக கற்கள் கரையும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்