சளி-இருமலை உடனே விரட்ட இதை செய்தால் போதுமே!

Report Print Kabilan in மருத்துவம்

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள கற்பூரவல்லி மூலிகைச் செடியைக் கொண்டு சளி, இருமல் போன்றவற்றை எளிதில் சரி செய்யலாம்.

கற்பூரவல்லி மூலிகையானது சளி, இருமல் உட்பட பல பிரச்சனைகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாமல் தீர்வைத் தருகிறது. பச்சிலை மூலிகையான கற்பூரவல்லி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

  • குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை ஏற்படுகிற அனைத்து விதமான உடல் நலக்குறைபாடுகளை கற்பூரவல்லி சரி செய்யும்.
  • குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மந்தம், வாந்தி எடுத்தல், பசியின்மை, சளி, செரிமான குறைபாடு போன்றவற்றை இந்த மூலிகை சரி செய்யும்.
  • கற்பூரவல்லியைக் கொண்டு நெஞ்சு சளி, சாதாரண காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
  • சைனஸ் பிரச்சனையை கற்பூரவல்லி எளிதில் குணப்படுத்தும். கற்பூரவல்லியை பயன்படுத்தி ஆவி பிடிப்பதன் மூலம் சளியை விரட்டலாம்.


கற்பூரவல்லி கஷாயம்
  • கற்பூரவல்லியின் 2 அல்லது 3 இலைகளை, 150 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதனுடன் தேன் கலந்து அருந்தலாம்.
  • தினமும் உணவு வேளைக்கு பின்னர் காலை, மாலை என இரண்டு வேளையும் இந்த கற்பூரவல்லி சாற்றை பருகி வந்தால், வீஸிங் உட்பட சுவாசப் பாதை கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
  • மருத்துவ குணம் நிறைந்த இந்தப் பச்சிலையை முதுமைப் பருவத்தினரும் கஷாயமாக குடிக்கலாம்.
  • கற்பூரவல்லியின் 5 இலைகளை நன்றாக நீரில் கொதிக்க வைத்து, தேன் கலக்காமல் 200 மில்லி கிராம் அளவு பருகினால், முதியவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்.
  • கற்பூரவல்லி மூலிகையைப் பயன்படுத்தி குழம்பு, ரசம், சூப் செய்யலாம். உணவுப் பதத்தில் இந்த மூலிகையைப் பயன்படுத்துவதுடன், கொதிக்கும் தண்ணீரில் சுக்கு, மஞ்சள், கற்பூரவல்லி மூலிகை போட்டு ஆவி பிடிப்பது நல்ல பயனைத் தரும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers