ஆயில் புல்லிங் செய்வது நல்லதா? இதனை தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Kabilan in மருத்துவம்

காலையில் பல் துலக்குவதற்கு முன்பு நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை கடைபிடித்து வருவதன் மூலம் உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும்.

சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நல்லெண்ணெயை ஊற்றி வாயைக் கொப்பளிக்கும் முறை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது. ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெயைத்தான் உபயோகிப்போம்.

ஆனால், தற்போது தேங்காய் எண்ணெய் ஆயில் புல்லிங்கை வெளிநாட்டினர் பிரபலப்படுத்துகிறார்கள். சாதாரணமாக தொண்டைப்புண் வந்தால் உப்புத்தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்ல பலனை தரும்.

  • வாய்ப்புண்ணுக்கு எண்ணெய் போன்றவற்றை வாயில் ஊற்றி கொப்பளிப்பது சிறந்த தீர்வாகும்.
  • தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி வாய் கொப்பளித்தால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும். அத்துடன் இதன் மூலம் பல்லிடுக்குகளில் உள்ள நச்சுப்பொருள், வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்கி, சுவைத்திறனை அதிகரிக்க முடியும்.
  • ஆயில் புல்லிங் வாய்க்கசப்பு, பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு தரும்.
  • கழுத்துவலி, கழுத்து சுளுக்கு, தொண்டைவலி, காதுவலி, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றிற்கும் ஆயில் புல்லிங் சிறந்த தீர்வை தரும்.
  • ஆயில் புல்லிங் மூலமாக பற்களில் உள்ள வெற்றிலைக்கறை, மஞ்சள் கறை ஆகியவற்றை நீக்கலாம். அத்துடன் சொத்தைப்பற்களால் வரக்கூடிய பற்கூச்சம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு ஆகியவற்றை இதன்மூலம் நீக்கலாம்.
  • ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய், பால், பழச்சாறுகள், தேன் மற்றும் கோமியம் போன்றவற்றை பயன்படுத்தினாலும், நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதே சிறந்த முறையாகும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers