வயிற்று உப்புசத்தை தடுப்பது எப்படி?

Report Print Fathima Fathima in மருத்துவம்

சிலருக்கு வயிறு நிறைய சாப்பிட்டாலும் சரி, எதுவும் சாப்பிடாவிட்டாலும் சரி வயிறு உப்பி இருப்பது போன்று இருக்கும்.

வாய் வழியாக உடலுக்கு வெளிக்காற்று செல்வதாலும், இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானம் ஆகாத உணவுப் பொருட்களாலும் இது ஏற்படுகிறது.

இதுதவிர வாய்வை அதிகம் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களான மொச்சை பயறு வகைகள், முட்டைகோஸ், காளிபிளவர், வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

மேலும் சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகத் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா சேர்தல், ஒரு வேளை உணவு உண்டதும் அடுத்த வேளை உணவு உண்ண அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளுதல். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, மலம் மற்றும் சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களாலும் ஏற்படலாம்.

உப்புசத்தால் உண்டாகும் இதர பிரச்சனைகள்
  • வயிறு மற்றும் அடிவயிறு வீங்குதல்
  • வாய்வுத்தொல்லை
  • வயிற்று இரைச்சல்
  • வயிற்றுப்பிடிப்பு
  • குமட்டல்
தடுப்பது எப்படி?
  • பக்டீரியா போன்ற தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது.
  • மலம், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால் தாமதிக்காமல் கழிவறை சென்றுவிடுவது.
  • நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது.
  • புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல்
  • செயற்கை குளிர்பானங்களை தவிர்ப்பதுடன் வாய்வு அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்