இரவில் நிம்மதியாக தூங்க தினமும் இதை குடியுங்கள்: நன்மைகளோ ஏராளம்

Report Print Jayapradha in மருத்துவம்

மஞ்சளில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளது.

பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், விட்டமின் டி மற்றும் விட்டமின் பி12 உள்ளது.

இந்த இரண்டினையும் கலந்து தினமும் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன எனப்தை பற்றி பார்ப்போம்.

இரவில் இரவில் நிம்மதியாக தூங்க செய்ய வேண்டியவை

  • தூக்கமின்மை பிரச்சனை முக்கிய காரணம் மன அழுத்தம், பதட்டம், கவலை, வேலைப்பளு, உடல் மற்றும் மனநலம் போன்றவை ஆகும்.

  • மேலும் இதயம், ரத்த அழுத்தம், வலி நிவாரணி, ஆண்டி- ஹிசுட்டமின் போன்ற மருந்துகள் உட்கொள்வதினால் கூட தூக்கமின்மை உண்டாகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • எனவே இதை சரிசெய்ய தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடித்தால் நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

பாலில் மஞ்சள் தூள் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகளுக்கு காரணமான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அழிக்கப்படும்.

  • மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும். மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.

  • பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது மற்றும் மஞ்சள் எலும்புகளை வலிமையாக்கும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

  • மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். எனவே தலை வலி அதிகமாக இருக்கும் போது, பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

  • பெண்கள் தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கள் குறையும்.

  • மஞ்சளில் உள்ள சேர்மங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடைத்து உடல் எடை குறைய உதவும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

  • முக்கியமாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...