உடலில் அதிகமாக வியர்வை வெளியேறுகிறதா? இதோ வெளிப்படுத்தும் நோயின் அறிகுறிகள்

Report Print Jayapradha in மருத்துவம்

பொதுவாக அனைவருக்கும் வியர்ப்பது இயல்பான ஒன்றாகும். ஏனெனில் நமது வீட்டில் இருக்கும் காற்றோட்டம் இல்லாத சூழல், சமையல் அறையின் வெப்பம், நாம் உடுத்தியிருக்கும் ஆடைகளின் தன்மை இது போன்ற முக்கிய காரணங்கள்.

ஆனால் இவற்றில் எந்தவித காரணமும் இல்லாமல், சாதரணமாக வியர்வை ஏற்பட்டால், உடனே மருத்துவரை சென்று பார்த்து, அவர்களின் ஆலோசனைகளை பெறுவது மிகவும் நல்லது.

சர்க்கரை நோய்

இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தாலும் அதிகம் வியர்க்கும் என கூறுகின்றனர்.முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான இது ஒரு முக்கியமான அறிகுறி ஆகும்.

தைராய்டு பிரச்சனை

ஹைப்பர் தைராய்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிக அளவில் எடையைக் குறைத்து, சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் அதிகமாக வியர்ப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

புற்றுநோய்

நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் / லிம்போமா மிகவும் அரிதாக இரவு நேரத்தில் மிகையான வியர்வையை உண்டாக்கும்.அதோடு வீங்கிய நிணநீர் முடிச்சுகள், எடை குறைவு, நெஞ்சு வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் இதர அறிகுறிகளாகும்.

ட்ரைமெத்தைலேமினுரியா

ட்ரைமெத்தைலேமினுரியா என்பது ஓர் மரபணு கோளாறு. இதன் காரணமாக அதிகப்படியான வியர்வை வெளிவருதல், சிறுநீர் கழிந்தால் நாற்றம் ஏற்படுவதும், வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படும்.

மூச்சுத்திணறல்

தூங்கும் போது மூச்சுத்திணறலை சந்தித்தாலும், தூங்கி எழும் போது ஈரமான பெட்சீட்டைக் காணக்கூடும். அளவுக்கு அதிகமாக வியர்ப்பது தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும்.

மாதவிடாய் நிற்கும் காலம்

85% மேலான பெண்களுக்கு, அவர்களது மாதவிடாய் சுழற்சி காலம் நிற்கும் போது அதிகமான வியர்வை வெளிப்படும். 40 - 45 வயதிலான பெண்களுக்கு அதிகமான வியர்வை வெளிபடுகிறது எனில் அதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம்.

வெப்ப பக்கவாதம்

வெயிலின் காரணமாக அதிகமானா வியர்வை வெளிப்படுவது இயல்பு தான். ஆயினும், அளவுக்கு மீறி வியர்வை வெளிப்படுகிறது எனில் உங்களுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதற்கான அறிகுறி தான்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers