இவர்கள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்கள்! ஆபத்து நிச்சயம்

Report Print Jayapradha in மருத்துவம்

சுடுநீரில் குளிப்பதால் நன்மைகள் இருந்தாலும் கெடுதல்களும் உண்டு.

பொதுவாக அளவுக்கு அதிகமாக தண்ணீரை கொதிக்க வைத்து குளிப்பதால், இயற்கையாக சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, அவை வறண்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் வரலாம்.

மேலும் ஒருசில நோயாளிகள் தினமும் வெந்நீரில் குளிப்பதை பழக்கமாக வைத்து இருக்கின்றனர். இப்படி அவர்கள் தினமும் சுடுநீரில் குளிப்பதால் என்ன பிரச்சனை சந்திக்க கூடும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

சொரியாசிஸ்

சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சினை உள்ளவர்களுக்கு வெந்நீரில் குளித்தால் அந்த நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும். எனவே சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

பொடுகு பிரச்சினை

அதிகப்படியான பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் சுடுநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சுடுநீரினால் தலைக்கு குளிக்கும் பொழுது தலையில் உள்ள முடியின் வளர்ச்சியை தடுத்து அதிகமான முடிகொட்டுவதை ஏற்படுத்துகின்றன.

சர்க்கரை நோய்

முற்றிய நிலையில் உள்ளவர்கள் சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருக்கும். எனவே இவர்கள் அதிக சூடான நீரில் குளிக்க கூடாது.

உடலில் சிறு கொப்புளங்கள்

உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் உள்ளவர்கள் நீரை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைத்து குளிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

கால்களில் வெடிப்பு

ஒருவருக்கு பாதங்களில் வெடிப்பு இருந்தால் அவர்கள் சுடுநீரில் குளிக்க கூடாது. ஏனெனில் அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படுவதுடன், உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர கூட வாய்ப்பு உள்ளது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்