குழந்தையின்மை பிரச்சனையை போக்க இந்த பூ மட்டும் போதுமாம்

Report Print Jayapradha in மருத்துவம்

அவாரம் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரை பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

எண்ணற்ற பருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ மருத்துவ குணங்களையும் மற்றும் அதன் நன்மைகளையும் பற்றி பார்ப்போம்.

மருத்துவ குணங்கள்
  • ஆவாரம் இலையை வெளியே செல்லும்போது தலையில் வைத்து காட்டி சென்றால் முடி கொட்டுவது தடுக்கப்படும்.
  • ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.
  • ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
  • ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும்.
  • ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தினால் கண் நோய் குணமாகும்.
  • ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
நன்மைகள்
  • குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
  • சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மறைய ஆவாரம் இலையை அரைத்து அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
  • வெள்ளைப்படுதல் சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாக ஆவாரையின் பூ பொடியுடன் 2 கிராம் வெண்ணெய் சேர்த்து குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும்.
  • மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
  • தோல் அரிப்பு ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்