இஞ்சி ஒத்தடம்! நன்மைகளோ ஏராளம்

Report Print Jayapradha in மருத்துவம்

கடந்த சில வருடங்களாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு அதிகம் நடைபெறுகிறது.

இந்த சிறுநீரக செயல்பாட்டை முறைப்படுத்த பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சிகிச்சை முறை தான் இஞ்சி ஒத்தடம்.

இஞ்சி ஒத்தடம் கொடுப்பதின் மூலமும், முறையான உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%விதமாக இரண்டே மாதத்தில் மாற்றலாம்.

இஞ்சி ஒத்தடம்
  • ஒரு பாத்திரத்தில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும். பின் 125 கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சியில் அரைத்து அந்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
  • இப்பொழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாறை நன்கு பிழிந்துவிட்டு பின்பு அந்த துணியை நன்கு இறுக்கமான முடிச்சி போட்டு அதனையும் அந்த பாத்திரத்தில் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
  • பின்பு அதனை 25 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
  • சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
  • பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் பிழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
  • சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆறும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்