தீராத முதுகு வலியா? இதையெல்லாம் டிரை பண்ணுங்க!

Report Print Jayapradha in மருத்துவம்

முதுகு தண்டின் நரம்புகளில் ஏற்படுகின்ற அழுத்தத்தினாலும், வயது சார்ந்த மாற்றங்களினாலும் முதுகு வலி ஏற்படும்.

உடல் சிதை, காயம், வீக்கம், புற்றுநோய் போன்ற காரணங்களினால் முதுகு வலி ஏற்படுகிறது. முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் தோன்றும் வலி, உடல் வளையும் போது, தீவிரமாகும்.

முதுகு வலியை போக்கும் சில வீட்டு மருத்துவங்கள்

  • தினமும் இரண்டு அல்லது மூன்று முறை ஐஸ்கட்டிகள் பயன்படுத்தினால் வீக்கம் குறையும். மேலும் துணியால் ஐஸ்கட்டிகளை சுற்றி வலி இருக்கும் இடத்தில் வைத்து எடுத்தால், வலி உடனடியாக மறையும்.

  • முதுகெலும்புகள் நேராக அமைய சரியான நிலையில் உட்கார்ந்து, கால் பாதத்தை தட்டையாக தரையின் மீது வைத்து உட்கருவது மிகவும் நல்லது.

  • தினமும் மசாஜ் செய்வதன் மூலம் வலி மட்டுமின்றி மன சோர்வும் குறைவதைப் பார்க்கலாம். மருந்து தேய்த்தும் மசாஜ் செய்யலாம்.

  • தினசரி காலையில், வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டு உட்கொண்டால், உடலுக்கு ஆரோக்கியமானது.மேலும் பூண்டு எண்ணெய்யை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் வெந்நீரில் குளித்தால் முதுகு வலி மறையும்.

  • உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம், உடல் தசைகளை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ளலாம்.

  • வெதுவெதுப்பான தண்ணீரில், எப்சம் எனப்படும் பேதியுப்பு கலந்து குளித்தால், முதுகு வலி குறையும். தண்ணீரின் வெப்ப நிலையை கவனித்து கொள்ளவும்.

  • பாலில், மஞ்சள் மற்றும் தேன் கலந்து குடித்தால், முதுகு வலி குணமடையும். பாட்டிக் காலத்து மருத்துவங்கள் என்றைக்கும் பலன் கொடுக்கும்,

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்