கொழுப்பை கரைக்கும் பாகற்காய் டீ: இன்னும் நன்மைகள் ஏராளம்

Report Print Jayapradha in மருத்துவம்

கசப்புச் சுவைக்கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒழுங்குபடுத்தும் இயல்பு, பாகற்காயின் தனிச்சிறப்பாகும். நம்முடைய கல்லீரலை அது இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். மேலும் பாகற்காயை கொண்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ யின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.

தேவையானவை
  • பாகற்காய்- 2 அல்லது 3
  • தண்ணீர்- தேவையான அளவு
  • தேன்- 2 டீஸ்பூன்
செய்முறை
  • பாத்திரம் ஒன்றில் உலர்ந்த பாகற்காய் சீவல்களை நீரினுள் போட்டு பத்து நிமிடத்திற்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அதை இறக்கி சிறிது நேரம் இளஞ்சூடாக ஆகும் வரை ஆற வைக்கவும். பிறகு அதனை வடிகட்டி இன்னொரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அதனுடன் தேனை இனிப்புக்காகவும் நறுமணத்துக்காகவும் சேர்த்து அருந்த வேண்டும்.
பாகற்காய் டீயின் நன்மைகள்
  • பாகற்காயில் உள்ள விட்டமின் 'ஏ' பீட்டா கரோட்டினாக உடலில் மாற்றம் பெற்று கண் பார்வையை தெளிவடைய செய்யும்.
  • பாகற்காயில் உள்ள விட்டமின் சி நோய் தொற்றுக்கு எதிராக போரிடக்கூடியது. பாகற்காய் டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • அஜீரண பிரச்னையை அகற்றி, குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் பாகற்காய் டீ உதவுகின்றது. கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் உதவும்.
  • பாகற்காய் டீ இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துவதால் கொழுப்பு பிரச்னை உள்ளவர்கள் இதை அருந்தலாம்.
  • நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு பாகற்காய் டீயும் நல்ல பலன்களை கொடுக்கக்கூடும்.
குறிப்பு

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு இந்த டீ எதிர்மறை விளைவுகளை தரக்கூடும். ஆகவே, உங்களுக்கு சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு குடிப்பது நல்லது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்