தினமும் காலையில் தேங்காய் எண்ணெய் வைத்து இதை செய்யுங்கள்! அற்புதங்கள் பல

Report Print Jayapradha in மருத்துவம்

உடல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு இயற்கை அளித்த ஆயுர்வேத மருந்து தேங்காய் எண்ணெய் ஆகும்.

மேலும் தினமும் காலையில் தேங்காய் எண்ணெய் வைத்து வாய் கொப்பளித்தால் வாயில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

எண்ணற்ற பலன்களை தரும் தேங்காய் எண்ணெய், வாய் புண், துர்நாற்றம், பல் கோளாறு, ஈறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும். இத்தனை பயன்களை தரும் தேங்காய் எண்ணெய் தினமும் பயன்படுத்துவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெயின் நன்மைகள்

  • தேங்காய் எண்ணெய்களில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதனால் பற்களை வெள்ளையாக்க செயற்கை கிரீம்களை உபயோகிப்பதை தவிர்த்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

  • தினமும் காலையில் தேங்காய் எண்ணெயால் வாய் கொப்பளித்தால் பற்களும் புத்துணர்ச்சி பெறும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் தேங்காய் எண்ணெய் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதனால் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது.

  • பற் சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த மருந்தாகும். பற் சிதைவு, ஈறு பிரச்னைகளை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி தேங்காய் எண்ணெய்க்கு உண்டு

  • தினசரி காலையில் பல் துலக்கிய பின் தேங்காய் எண்ணெயை வாயில் வைத்து கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். இதற்காக பற்களில் தேங்காய் எண்ணெய் வைத்து தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இதனை தினமும் 5 நிமிடம் வரை செய்ய தொடங்கி படிப்படியாக 20 நிமிடங்கள் வரை தேங்காய் எண்ணெயால் வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • ஈறுகளில் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் எண்ணெய் கொண்டு வாயைக் கொப்பளியுங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகரித்து ஈறு பிரச்சனைகள் குறையும்.

  • தலைவலி ஏற்படும் போது தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதன் மூலம், தலைவலியில் இருந்து விடுபடலாம்.

  • தினமும் தேங்காய் எண்ணெய் வைத்து ஆயில் புல்லிங் செய்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers