சிறுநீர் பிரச்சனையை விரட்டி அடிக்கும் வெள்ளரி!

Report Print Jayapradha in மருத்துவம்

படரும் கொடி வகையைச் சேர்ந்தது வெள்ளரி. வெள்ளரியின் பிஞ்சு, காய், பழம், வேர் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

வெள்ளரியில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், குளோரின் போன்ற சத்துகள் உள்ளன. மேலும் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.

நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியைச் சாப்பிடுவதால் தாகம் தணிப்பதோடு, உடலுக்குக் குளிர்ச்சி, இரைப்பையில் ஏற்படும் புண், மலச்சிக்கல்,வயிற்றுப்புண் ஆகியவைகளை குணப்படுத்தும்.

வெள்ளரியின் பயன்கள்
  • கோடைக் காலங்களில் அதிக படியான வெயிலினால் சிறுநீர் துவாரங்களில் அரிப்பு, வலி போன்றவை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சிறந்த மருந்தாக வெள்ளரி உள்ளது.
  • வெள்ளரிப்பிஞ்சை தினமும் நாம் உண்பதினால் வாதம், பித்தம், கபம் மற்றும் கீல்வாதம் குணமாகும்.
  • தொண்டை தொடர்பான நோய்களை குணப்படுத்த வெள்ளரி இலைகளை காய வைத்து சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது.
  • பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை முழுமையாக குணப்படுத்த வெள்ளரி விதையை அரைத்து அதனுடன் நீர் சேர்த்து வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.
  • குழந்தைகள் சிறுநீர் கழிக்க சிரமப்படும்போது வெள்ளரி விதையை மையாக அரைத்து தொப்புள் மற்றும் அடிவயிற்றில் பூசுவதன்மூலம் நிவாரணம் கிடைக்கும்.
  • கர்ப்பப்பை பிரச்னை, அடிவயிற்றில் ஏற்படும் சூடு, மாதவிடாய்க்கோளாறுகள் போன்றவற்றை சரி செய்யும். பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சலையும் போக்கவும் வெள்ளரி மிகவும் உதவும்.
குறிப்பு
  • கபம், இருமல், நுரையீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்