இந்த அறிகுறிகள் இருக்கா? இரும்புசத்து குறைவா இருக்காம்

Report Print Jayapradha in மருத்துவம்

உடலில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க இரும்புச்சத்து மிகவும் தேவைப்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும்.

எனவே ஹீமோகுளோபினை அதிகரிக்க அன்றாடம் 8-10 மிகி இரும்புச்சத்தைப் பெற வேண்டும். மேலும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு விட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்க பெரிதும் உதவுவதும் ஹீமோகுளோபின் தான்.

உடலில் இரும்புச் சத்து குறைவதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அறிகுறிகள்
 • தினமும் வழக்கத்திற்கு மாறான அசதி ஏற்பட்டு முழுமையாக சோர்வான உணர்வு தோன்றும்.
 • ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதினால் ஆக்ஸிஜன் அளவும் குறைவாக இருக்கும். இதனால் அன்றாட வேலைகளை செய்யும்போதும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
 • நகக்கண், ஈறுகள், முகம் ஆகிய பாகங்கள் மட்டுமன்றி, உடல் முழுவதுமே வெளிறிய நிறம் போல் காட்சியளிக்கும்.
 • நாணயங்கள், துணி, சிகரெட் துண்டுகள், மரத்துண்டுகள் மற்றும் ஊசிகள் போன்றவற்றை கடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும்.
 • உங்களுக்கு அதிகமான முடி கொட்டினால், அது இரும்புச் சத்து குறைபாட்டின் காரணமே ஆகும்.
 • இரும்புச் சத்து குறைபாட்டினால் மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் சென்று சேராததன் காரணமாக தலைவலி போன்ற அவதிகள் ஏற்படும்.
 • கைகள் மற்றும் பாதங்கள் குளிர்ந்து போதல், பதற்றம், நகங்கள் உறுதியற்று உடைந்து போதல் மற்றும் அடிக்கடி நோய் தொற்று ஏற்படும்.
ஹீமோகுளோபினை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள்
 • புரோட்டீன், விட்டமின் பி மற்றும் சி நிறைந்த தட்டைப்பயறு, பாசிப்பயறு போன்றவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை சீராகப் பராமரிக்கலாம்.
 • விட்டமின் சி அதிக அளவு நிறைந்த ஆரஞ்சு பழத்தில் அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை அதிகரிக்கலாம்.
 • இரும்புச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை நிறைந்த பச்சை இலைக் காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து உண்ணலாம்.
 • விட்டமின் பி12 அதிகம் நிறைந்த மீன், முட்டை, ஆட்டு ஈரல் மற்றும் பால் பொருட்களை உட்கொண்டு வந்தால், இந்த குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்