இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படலாம்: புதிய ஆய்வறிக்கை

Report Print Peterson Peterson in மருத்துவம்

இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிடும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக புதிதாக எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

துருக்கி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் 700 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில், இரவு 7 மணிக்கு பிறகு உணவு சாப்பிடும் நபர்களுக்கு எளிதில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் தூங்கும் நபர்களுக்கு இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

இரவு உணவு அருந்தியதற்கு பின்னர் தூங்கும்போது நமது இரத்த அழுத்தமானது 10 சதவிகிதம் அளவிற்கு குறைய வேண்டும்.

ஆனால், 7 மணிக்கு பிறகு சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் இடைவெளி இல்லாமல் உடனடியாக படுக்கைக்கு செல்லும் நபர்களுக்கு இரத்த அழுத்தம் குறையாதது தெரியவந்துள்ளது.

மேலும், இரவில் தாமதமாக உணவு சாப்பிடும் நபர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலை தொடர்ந்தால், அவர்கள் எளிதில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments