வெளிநாட்டில் இருந்து ஊருக்கு கிளம்ப விமான நிலையம் வந்த தமிழர்.. ஊருக்கே திரும்ப முடியாத அளவுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in மலேசியா

மலேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழக இளைஞரின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் பூமாலை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், விசா காலம் முடிந்தும், 2 ஆண்டுகள் கூடுதலாக, மலேசியாவில் இருந்த தங்கப்பாண்டியன், கடந்த 14 ஆம் திகதி மதுரைக்கு விமானம் மூலம் வருவதற்காக கோலாம்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும், இதுவரை, தங்கப்பாண்டியனின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, தங்கபாண்டியனின் சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்