மனிதக் கரு கடத்தல்... விசாரணை வட்டத்தில் பிரித்தானிய தம்பதி: சிக்கிய இளைஞரின் பகீர் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in மலேசியா

இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் மனிதக் கரு கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரித்தானிய தம்பதிகள் சிக்கியுள்ளனர்.

மலேசியாவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு சென்ற விமானத்தில் மனிதக் கருவை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மலேசியாவில், பிரித்தானிய தம்பதிகள் நடத்தும் ஹார்ட் ஏ ஆர் டி என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் எனவும்,

கடந்த 18 மாதங்களில் மட்டும் இதுபோன்று 10 முறை அவர் இந்தியாவுக்கு கருவைக் கடத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மலேசியாவில் செயல்பட்டுவரும் ஹார்ட் ஏ ஆர் டி நிறுவனம் வாடகைத்தாய், கரு தானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது.

மட்டுமின்றி, குறித்த நிறுவனம் சட்டவிரோதமாக பல மருத்துவமனைகளுக்கு மனிதக் கருவைக் கடத்தி விற்பனை செய்து பெருமளவில் பணம் பெற்று வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாடகைத்தாய், குழந்தைப்பேறு, செயற்கைமுறை கருத்தரித்தல் போன்றவற்றுக்கு வெளிநாடுகளை விட இந்தியாவில் செலவு மிகவும் குறைவு என்பதால் பல தம்பதிகள் இந்தியாவுக்கு படையெடுப்பது அதிகரித்து வருகிறது.

இதைப் பயன்படுத்தி சர்வதேச நிறுவனங்கள் பல சட்டவிரோதமாக `கரு' விற்பனை செய்து வருகிறது. மேலும், கரு தானம் செய்பவர்களிடமிருந்து கருவைப் பெறும் சில மருத்துவமனைகள் இதை வர்த்தகமாக்கி பணம் சம்பாதித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்