வெட்டி நொறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டவரின் சடலம்: சிக்கிய பகீர் கடிதம்

Report Print Arbin Arbin in மலேசியா

மலேசியாவில் குடியிருப்பு ஒன்றில் வெட்டி நொறுக்கப்பட்ட நிலையில் அயர்லாந்து நாட்டவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் எழுதியாக கடிதம் ஒன்றும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

திங்களன்று உள்ளூர் நேரப்படி மாலை 5.15 மணியளவில் ரத்த வெள்ளத்தில் குறித்த நபரின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

50 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் கால்களும் கையும் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது எனவும்,

இது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை எனவும் மலேசிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபருக்கு அறிமுகமான நபர் ஒருவரே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், சமையல் பாத்திரம் ஒன்றால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதும்,

அதன் பின்னர் அவரது கழுத்து அறுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி அவரது வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மலேசிய பொலிசார் மீதும் நீதித்துறை மீதும் தமக்கு மரியாதை இருப்பதாகவும், ஆனால் நீதியை சில நேரங்களில் கேட்டுத்தான் பெற வேண்டியுள்ளது,

நான் மாஃபியா கும்பலை வெறுக்கிறேன், எனது காதலியை விரும்புகிறேன் என கடிதம் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளது பொலிசாரிடம் சிக்கியுள்ளது.

கொல்லப்பட்ட அந்த அயர்லாந்து நாட்டவர் கடந்த இரு வாரங்களாக மட்டுமே மலேசியாவில் தங்கியிருந்துள்ளார்.

மேலும் அவரது பெயர் பிரியான் பேட்ரிக் என்றும் அவர் சிங்கப்பூர் நிறுவனமான ஃபர்ஸ்ட் லுக்கவுட் மார்கெட்டிங் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகி என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்