வெளிநாட்டிலிருந்து வந்து தந்தையை துடிதுடிக்க கொலை செய்த மகன்! அதிர்ச்சி காரணம்

Report Print Deepthi Deepthi in மலேசியா

திருவாரூர் மாவட்டத்தில் திருமணம் செய்து வைக்காததால் தந்தையை, மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணேசன் - ஜெயலட்சுமி தம்பதியினருக்கு ராணி(40), விஜயா(35) ஆகிய மகள்களும், முருகப்பன்(34) என்ற மகனும் உள்ளனர். இதில் ராணி, விஜயா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது.

முருகப்பன், மலேசியாவில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

முருகப்பன் தனது தந்தையிடம், எனக்கு எதற்காக திருமணம் செய்துவைக்கவில்லை என்று வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு கணேசன், உன் அவசரத்துக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகப்பன் வீட்டில் இருந்த கோடரியால் தனது தந்தை கணேசனின் பின்பக்க கழுத்தில் வெட்டினார். இதில் கழுத்து துண்டாகி சம்பவ இடத்திலேயே கணேசன் துடிதுடித்து உயிரிழந்தார்.

கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து எடையூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து முருகப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers