சார்ஜ் போட்டுக் கொண்டே ஹெட்போனில் பேசிய சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in மலேசியா

மலேசியாவில் 16 வயது இளைஞர் சார்ஜ் போட்டுக் கொண்டே ஹெட்போனில் பேசியதால், செல் போன் வெடித்து அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

மலேசியாவின் Rembau பகுதியைச் சேர்ந்தவர் Mohammed Zaharin. 16 வயது சிறுவனான இவர் சம்பவ தினத்தன்று தன்னுடைய மொபைல் போனை சார்ஜ் போட்ட நிலையில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பயன்படுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக போன் வெடித்ததால், அந்த நபர் அந்த இடத்திலே இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

மகன் அறையில் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறான் என்று நினைத்த அவரின் தாய், அறை உள்ளே வந்து பார்த்த போது, மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் Mohammed Zaharin-ஐ பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் சார்ஜ் போட்டுக் கொண்ட ஹெட்போனை பயன்படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து தகவல்கள் கூறப்பட்டாலும், அதை ஊதாசீனப்படுத்துவதால், இது போன்ற நிலை ஏற்படுகிறது என்று கூறி அந்த இளைஞனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்