மாயமான மலேசிய விமானம் இப்படி தான் தண்ணீரில் மூழ்கியிருக்கும்: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

Report Print Raju Raju in மலேசியா

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான மலேசிய விமானம் எந்த வகையில் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற ஆவணப் படம் வெளியாகி உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகரை நோக்கிச் சென்ற எம் ஹெச் 370 என்ற பயணிகள் விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டும் இதுவரை விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்று கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் விமானியுடன் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எம் ஹெச் 370 விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விமானம் நேரடியாக கடலுக்குள் விழுந்து நொறுங்குவது போல் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ காட்சிகள் மிக தத்ரூபமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்