மாயமான மலேசிய விமானி மொடல் சகோதரிகள் இருவருக்கு காதல் வலை வீசியது அம்பலம்

Report Print Arbin Arbin in மலேசியா

மாயமான மலேசிய விமானத்தின் 53 வயது விமானி மொடல் சகோதரிகள் இருவருக்கு காதல் வலை வீசியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த சகோதரிகள் இருவருக்கும் 53 வயதான விமானி Zaharie Ahmad Shah சுமார் 97 குறுந்தகவல்கள் அனுப்பியுள்ளார்.

மட்டுமின்றி தம்மை சந்திக்க கோலாலம்பூருக்கு வரும்படியும் அந்த சகோதரிகளை நிர்பந்தித்து வந்துள்ளார்.

மேலும் ஆபாசம் கலந்த உரையாடல்கள் மட்டுமே அவர் குறித்த சகோதரிகளுடன் மேற்கொண்டுள்ளார்.

இரட்டையர்களான அந்த இருவரும் மலேசியாவில் பிரபலமான மொடல் சகோதரிகள் என கூறப்படுகிறது.

மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான விமானி அகமது ஷா என்பவர் மாயமான MH370 விமானத்தின் இன்னொரு விமானியாவார்.

இவர் மலேசிய அரசை கடுமையாக விமர்சித்து வந்தவர் மட்டுமின்றி, மலேசிய பிரதமரை கயவன் எனவும் திட்டியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 238 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் மாயமான விமானம் தொடர்பில் இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்