நட்பு காதலாக மாறிய அழகிய தருணம்: மைனா நந்தினியின் காதல் டு கல்யாண சுவாரஸ்ய கதை

Report Print Kavitha in வாழ்க்கை

பிரபல தொலைக்காட்டிசியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் 'மைனா' என்ற கேரக்டர் மூலம் பிரபலமானவர் தான் நந்தினி.

இவருக்கு யோகேஷ்ற்கும் சில நாட்களுக்கு முன்பு தான் கல்யாணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.இதில் சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நந்தினி சீரியல்களில் பிஸியாக இருந்தபோதே, சென்னையில் ஜிம் நடத்தி வந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கருத்து வேறுபாடு உண்டாகி பிரிந்து வாழ்ந்த நிலையில் கார்த்திக் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இதன் பிறகு நந்தினி சில மாதங்கள் டிவி, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த போது அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மறுபடியும் அவரை டிவி பக்கம் வரவழைத்தனர்.

instagram

தற்போது இவருக்கு இரண்டாவது முறையாக சென்னை சேப்பாக்கத்தில் கோயில் ஒன்றில் எளிமையான முறையில் நவம்பர் 11 திகதியன்று நந்தினிக்கும் யோகேஷ்வராம்க்கும் திருமணம் நடைப்பெற்றது.

இதனை தொடர்ந்து தனது காதல் டு கல்யாண வாழ்க்கையை பற்றி யோகேஷ் கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைப்பெற்ற 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' என்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிய போது தான் நந்தினிக்கு அறிமுகமானார்.

எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது, ஆரம்பத்தில் எங்களுக்குள் நட்பு மட்டுமே இருந்தது. போக போக அது காதலாக மாறியது. அந்த விருப்பத்தை நந்தினியிடம் சொல்லத் தயக்கமாக இந்த போது என்னுடைய விருப்பத்தை முதலில் என் வீட்டில் கூறினேன்.

instagram

கடந்த கால வாழ்க்கையிலிருந்து நந்தினி மீண்டு வந்துட்டாங்களா இல்லையா எனவும் நந்தினிக்கு சம்மதம் என்றால் மட்டும் திருமணத்தை பற்றி பேசுங்கள் என்றேன். அதே போல இரு வீட்டார் கலந்து பேசி எங்கள் கல்யாணத்தை முடிவு செய்தனர்.

மேலும் கடைசி வரை இந்த நட்பு வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்று நானும் எனது சம்மதத்தை தெரிவித்தேன் என்றார் நந்தினி.

இப்படிதான் எங்கள் காதல் நட்பு ரீதியாக மலர்ந்து கல்யாணத்தில் முடிந்துள்ளது என மைனா நெகிழ்சியுடன் கூறினார்.

instagram

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்