உங்கள் ராசிப்படி இந்த தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா?

Report Print Kabilan in வாழ்க்கை

அனைத்து ராசிக்காரர்களும் இந்த தீபாவளி எப்படி அமையப்போகிறது என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

நீங்கள் உங்கள் சுய அதிகாரம் உள்ள ஒரு வாழ்க்கையை உருவாக்குங்கள். உங்களது சரியான முடிவும், ஆரோக்கியமான உடல் நலமும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். எப்போதும் தனக்கு தானே மன்னிப்பு கோர வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் தலைமைப் பொறுப்பை திறம்பட செய்யுங்கள்.

ரிஷபம்

உங்கள் உடல் அழகை மேம்படுத்த, ஆர்கானிக் உணவுகளையும், உங்களுக்கு பொருத்தமான சௌகரியமான ஆடைகளையும் அணியுங்கள். அழகான பொருட்களை வாங்கி மகிழ்ந்து, உங்களின் மீதான நன்மதிப்பை வளர்த்து கொள்ளுங்கள்.

மிதுனம்

உங்கள் மனதில் இருக்கும் விடயங்களை பற்றி விவரிக்கவும், விவாதிக்கவும் யாரையாவது அணுகுங்கள். இதனால் உங்கள் மனதில் மகிழ்ச்சி துளிர்க்கும்.

கடகம்

உங்கள் மனதில் ஒளிர்ந்திருக்கும் குழந்தைதன்மையை தட்டி எழுப்புங்கள். அது உங்களையும், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்களைச் சுற்றி ஒரு ஆத்மார்த்தமான ஒரு சூழலை உருவாக்குங்கள்.

சிம்மம்

உங்கள் மனதில் ஒளிர்ந்திருக்கும் உண்மையான நபரை காட்டுங்கள். அத்துடன் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தனித்துவத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். இவ்வாறான உறுதிகொண்ட எண்ணங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.

கன்னி

உங்களது சுய கவனிப்பை கொடுக்கின்ற விடயங்களை செய்யுங்கள். வேடிக்கை குணத்தை வெளிப்படுத்தும் காரியங்களை நீங்கள் செய்வது மூலம், தீபாவளியை சிறப்பாக கொண்டாடலாம்.

துலாம்

தனிப்பட்ட உறவுகளை சமநிலையாக வைப்பது, முடிவுகளை எடுக்க ஒரு வழியை உருவாக்குவது, உங்களை எப்படி நடத்துவது என்பதை மற்றவர்களுக்கு புரிய வைப்பது ஆகியவற்றின் மூலம் தீபாவளியை நீங்கள் சிறப்பாக கொண்டாடலாம்.

விருச்சிகம்

உங்களது நோக்கங்களை அறிய உதவும் புத்தகங்களை படியுங்கள் மற்றும் உறவுகளுடன் ஆழமான உரையாடலை நடத்தி அவரின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளுங்கள். இவற்றின் மூலம் நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம்.

தனுசு

ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி ஒரு உன்னதமான உறவுகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள். உங்களது வாழ்வை ஒரு தத்துவார்த்தமான வாழ்க்கையாக வாழுங்கள்.

மகரம்

உங்கள் இலக்குகளின் பாதையை முன்னேற்ற, உங்கள் மனதில் இருக்கும் விவரங்களை கொண்டு ஒரு பெரிய திட்டத்தை உருவாக்குங்கள். மேலும், உங்கள் சாதனைகளை அதில் முன்னுரிமை செய்யுங்கள். இவை உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.

கும்பம்

கனவுகள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும் இணைக்க முற்படுங்கள். எப்போதும் தனித்துவமான மற்றும் தன்னியல்பான தன்மையுடன் காணப்படுங்கள். உங்களின் தனித்தன்மையே உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.

மீனம்

மற்றவர்களுக்கு உதவும் வழிகளை கண்டறியுங்கள். உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களுடன் இணைய முற்படுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக ஆற்றலுடன் செயல்படுங்கள்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்