13ம் திகதிகளில் வரும் வெள்ளி உண்மையிலேயே அதிர்ஷ்டம் இல்லையா?

Report Print Abhimanyu in வாழ்க்கை

மூடநம்பிக்கை என்பது இன்றும் மனிதன் மீது தாக்கம் செலுத்தும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

13ம் திகதி வெள்ளிக்கிழமை என்பது உலகில் பல நாடுகளில் துரதிஷ்டமான நாளாக தான் கருதப்படுகின்றது.

அவ்வாறான இந்த 13ன் பின்னால் உண்மையிலேயே துரதிஷ்டம் ஒளிந்திருகின்றதா? என்பதை பார்க்க முன் வரலாற்றில் இவ்வாறான சில தினங்கள் துரதிஷ்டவசமாகதான் நடந்துள்ளன.

13.09.1940

இரண்டாம் உலகப்போரின் போது ஐந்து ஜேர்மன் குண்டுகள் “பக்கிங்காம்” அரண்மனை மீது வீசப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது.

13.11.1970

வங்கதேசத்தில் பெரும் புயல் ஒன்றினால் மொத்தமாக 13 லட்சம்பேர் பலியாகினர்.

13.06.1986

கணணி வைரஸ் ஒன்றின் உருவாக்கத்தால் பிரிட்டனில் உள்ள பல கணணிகள் சேதமாகின.

13.101989

உலக பங்குசந்தையில் மாபெரும் சரிவு ஏற்பட்டது. இன்றும் கூட யாரும் இதனை மறக்கவில்லை.

இவ்வாறான பல சம்பவங்கள் இந்த 13ம் திகதிகளில் தான் இடம்பெற்றுள்ளது. இதன் பொருட்டே நிறைய மக்கள் இந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமையை பார்த்து அஞ்சுகின்றார்கள்.

ஆனால் இதன் பின் காணப்படும் பொருளாதார வீழ்ச்சியை யாரும் பார்ப்பதில்லை, இது போன்ற நாட்களில் சுமார் 900 பில்லியன் டொலர்கள் வியாபாரம் இல்லாமல் போகின்றது.

இருந்தாலும் மூடநம்பிக்கை மனிதர்களை இவ்வளவு துாரம் ஆட்டிப்படைக்ககூடாது.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments