சோதனையை சாதனையாக்கிய கேப்டன் கோபிநாத்! அவர் வாழ்க்கை வரலாற்றை கூறிய சூரரைப்போற்று படம்.. யார் அவர்?

Report Print Raju Raju in வாழ்க்கை முறை
293Shares

நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

இளம் வயதில் இருந்து கடுமையாக உழைத்து பல தடைகளை உடைத்து உச்சம் தொட்டவர் தான் கோபிநாத்.

கேப்டன் கோபிநாத் என்பவர் யார்?

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள கொரூர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு பிறந்தவர் கோபிநாத். ஆரம்ப கல்வியை வீட்டில் இருந்துகொண்ட பயின்ற கோபிநாத், 5ம் வகுப்பிலேயே பள்ளியில் சேர்ந்தார்.

அங்கு படித்துக்கொண்டிருந்தபோது, வெறும் 11 வயதில் சைனிக் பள்ளியில் சேர்வதற்கு தேர்வெழுதி, அதில் வெற்றி பெற்றார்.

இதுவே அவரது வாழ்க்கையின் முதல் வெற்றி என்று குறிப்பிடலாம், சைனிக் பள்ளியில் இணைந்த பின்னர், National Defence Academy, இந்திய ராணுவம் என அவரது வெற்றி தொடர்ந்தது.

ராணுவத்தில் கேப்டனாக இருந்த போது 1971ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் யுத்தம் நடந்தது.

யுத்தம் முடிந்த பின்னரும் ராணுவத்தில் பணியாற்ற விரும்பாத கோபிநாத், வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.

அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் பல புதுமைகளையும் புகுத்தினார், தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய கோபிநாத் தேர்தலில் போட்டியிட்டு தோற்று போனார்.

இருப்பினும் மனம் தளராமல் இருந்த கோபிநாத், ஹெலிகொப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை தொடங்க எண்ணினார். இதற்கான முதலீடு பெரிய சுமையாக இருந்த போதிலும், அனுமதி பெறுவது கஷ்டமாகவே இருந்தது.

அதிலும் சுவாரசியமாக நிறுவனத்தின் தொடக்க விழாவை அறிவித்து விட்டு அதற்குள் அனுமதியை பெற போராடிய அனுபவம் கோபிநாத்துக்கு மட்டுமே உண்டு.

ஒரு ஹெலிகொப்டரில் தொடங்கி தொடர்ந்து படிப்படியாக அயராத உழைப்பினால் முன்னணி நிறுவனமாக உயர்த்தினார். இதற்குப் பிறகுதான் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்குவதற்கான ஏர் டெக்கானை துவங்க முடிவுசெய்கிறார் கோபிநாத்.

பலகட்ட பரிசோதனைகள், முயற்சிகளுக்கு பின்னர் தான் நினைத்ததை கோபிநாத் தொடங்கினாலும், முதல் நாளிலேயே முதல் விமானமே விபத்துக்குள்ளானது. இதன்பின்னர் பல எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், வெற்றிகரமாக செயல்பட தொடங்கினார்.

இத்தோடு நிற்காமல் பல முதலீடுகளை தேடிய போது தான், ஏர் டெக்கானில் முதலீடு செய்கிறார் விஜய் மல்லையா. ஒரு கட்டத்தில் ஏர் டெக்கானின் கட்டுப்பாடு விஜய் மல்லையா வசம் சென்று விட, தன் பங்குகளை விற்றுவிடுகிறார்.

இவ்வாறு பல போராட்டங்களை கடந்து சாதித்த கேப்டன் கோபிநாத், தன்னுடைய சுயசரிதையை Simply Fly: A Deccon Odyssey என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்