பிச்சை எடுத்தே பெரும் செல்வந்தர்கள் ஆன இந்த பிச்சைக்கார்களை தெரியுமா? வருமானத்தை அறிந்தால் ஷாக் ஆயிடுவீங்க

Report Print Raju Raju in வாழ்க்கை முறை
608Shares

இந்தியாவில் கடைசியாக சேகரிக்கப்பட்ட தரவுபடி 4,00,000க்கும் அதிகமாக பிச்சைக்காரர்கள் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

பிச்சையெடுப்பது சட்டப்படி தவறு என்ற போதிலும் இதன் எண்ணிக்கை குறையவில்லை.

இப்படி பிச்சை எடுத்தே பிரபலமாகவும், பெரும் செல்வந்தர்களாகவும் சில பிச்சைக்காரர்கள் மாறியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?

பரத்

மகாராஷ்டிராவின் Azad Maidan மற்றும் Chhatrapati Shivaji டெர்மினஸில் பிச்சையெடுக்கும் 51 வயதான பரத் இந்தியாவில் உள்ள பணக்கார பிச்சைக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

அவர் மாதம் ரூ75,000 வருமானம் ஈட்டுகிறார்.

மேலும் 70,00,000 மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடி வீடுகளை அவர் சொந்தமாக வைத்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வாதியா தேவி

பீகாரின் பாட்னாவில் வசிக்கும் சர்வாதியா தேவி என்ற பெண் பிரபல பிச்சைக்காரியாக திகழ்கிறார்.

இவர் மாதம் ரூ 50,000 வருமானம் ஈட்டுவதாக தெரியவந்துள்ளது.

சம்பாஜி காலே

மும்பையில் உள்ள கர் பகுதியில் பிச்சையெடுக்கும் சம்பாஜி பிச்சை எடுப்பதோடு சொந்த ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

ஒரு சில முதலீடுகளைக் கொண்டுள்ள இவரிடம் லட்சத்துக்கும் அதிகமான வங்கி இருப்பு உள்ளது.

கிருஷ்ண குமார்

மும்பையில் பிச்சையெடுக்கும் கிருஷ்ண குமார் நாள் ஒன்றுக்கு ரூ 1500 சம்பதிப்பதோடு, 5,00,000, மதிப்புள்ள சொந்த வீட்டை வைத்துள்ளார்.

பப்பு குமார்

பாட்னாவை சேர்ந்த பப்பு குமாரின் மொத்த சொத்து மதிப்பு 1.25 கோடி ஆகும்.

ஒரு விபத்தில் கால் முறிந்தபின், பப்பு பாட்னாவின் ரயில் தளங்களில் பிச்சை எடுக்கத் தொடங்கினார் என தெரியவந்துள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்