பிணவறையில் போஸ்ட் மார்டம் வேலை செய்த வடிவேலு பாலாஜி! திறமையால் ரசிகர்கள் மனதை வென்ற கலைஞனின் வாழ்க்கை பக்கங்கள்

Report Print Raju Raju in வாழ்க்கை முறை
1893Shares

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

திறமையான நகைச்சுவை கலைஞனான அவர் 5 ஆண்டுகளுக்கு முன்னரே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார்.

இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்னர் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அங்கே மருத்துவச் செலவுகள் அதிகரித்துக்கொண்டே போக, இன்னொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றவர்கள், அங்கும் சரிவர பார்க்கமுடியாமல், அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார் பாலாஜி.

வடிவேல் பாலாஜி அவ்வளவு எளிதாக தொலைக்காட்சி மற்றும் திரைதுறையில் நுழையவில்லை.

மதுரையை பூர்வீகமாக கொண்ட பாலாஜி சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். ஆரம்பத்தில் பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் டிப்பார்ட்மென்ட்ல வேலை பார்த்தார்.

அங்கு வேலை பார்த்து கொண்டே கலக்கப்போவது யாரு சீசன் 4, அது இது எது' நிகழ்ச்சிகள் செய்ய தொடங்கினார்.

எப்படி பிணங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே காமெடி செய்கிறார் என பலரும் அவரை பார்த்து வியந்திருக்கிறார்கள்.

இப்படி கடினமான சூழலை எதிர்கொண்டே தமிழ் ரசிகர்களின் மனதில் தனது நகைச்சுவை திறமை மற்றும் தன்னம்பிக்கையால் நீங்காத இடம்பிடித்திருக்கிறார்.

பாலாஜிக்கு மனைவியும் இளம் வயதில் 2 குழந்தைகளும் உள்ளனர்.

பாலாஜியை இழந்து தவிக்கும் இந்த அழகான குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை என பல திரை நட்சத்திரங்கள் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்