காலையில் தூங்கி எழுந்தவுடன் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்! மீறினால் ஏற்படும் பிரச்சினைகள் இவைதான்

Report Print Raju Raju in வாழ்க்கை முறை
975Shares

காலையில் தூங்கி எழுந்தவுடன் சில விடயங்கள் செய்வதை தவிர்த்தால் அது மனதுக்கும், உடலுக்கும் நலம்பெயர்க்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அலாரம்

பலரும் காலையில் அலாரம் அடித்த பின்னர் எழுவதற்கு சோம்பல்பட்டு அந்த நேரத்தை 5 - 10 நிமிடம் மாற்றி வைப்பார்கள்.

மாற்றி மாற்றி வைக்கும்போது தினமும் தூங்கும் தூக்கத்தின் சுழற்சியில் மாற்றம் ஏற்படும். கஷ்டப்பட்டு எழுந்திருக்க வேண்டியதாகும். சுறுசுறுப்பு இருக்காது. இதனால் நாள்முழுதும் ஒருவிதமான சோர்வும் தடுமாற்றமும் இருக்கும்.

செல்போனை தேடாதீர்கள்

இந்த காலக்கட்டத்தில் பலரும் தூங்கி எழுந்தவுடன் தேடும் பொருள் செல்போன் தான்.

நாளை நன்றாகத் துவங்க வேண்டுமானால் வேறு ஏதேனும் ஒரு வேலையை செய்யும்முன்பு போனைத் தொடக்கூடாது. இமெயில், மெசேஜ் என வேலை சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதை சிறிது நேரம் ஒத்தி வைப்பதில் தவறில்லை. கண்களைத் திறந்தவுடன் செல்போன் ஒளியைப் பார்ப்பது நல்லதல்ல.

உடலை சுருட்டி படுக்காதீர்கள்

காலையில் கண் விழித்தவுடன் சிலருக்கு மீண்டும் சுருண்டு படுக்கும் பழக்கம் இருக்கும். இரவில் நாம் தூங்கும்போது முதுகுத் தண்டுவடத்தில் சில திரவங்கள் சுரக்கும். இது முதுகு தண்டை வலிமையாக்கும். இதனால்தான் காலையில் சில சென்டிமீட்டர் வளர்ந்து இருப்பதைப் போன்று தோன்றும். திடீரென சுருளும்போது முதுகில் வலி உண்டாகும்.

எனவே காலையில் உடலை நேராக நீட்டி, பிறகு எழுந்திருக்க வேண்டும். இதனால் தசைப்பிடிப்புகள் நீங்கி வலுவாகும். மேலும் மன அழுத்தத்தைக் குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

தொலைக்காட்சி வேண்டாமே

காலையில் எழுந்தவுடன் சிலருக்கு கை டிவி ரிமோட்டைத் தேடும். ஆனால் நன்கு தூங்கிய பிறகு டிவி திரையைப் பார்ப்பது கண்களுக்கு நல்லதல்ல. அதுமட்டுமல்லாமல் அதிர்ச்சியான தகவல்கள் சிலருடைய நாளையே கெடுத்துவிடும் என்பதை மறவாதீர்கள்.

படுக்கையை சுத்தமாக வைக்க வேண்டும்

காலை எழுந்தவுடன் படுக்கையை மடித்து அடுக்கி வைப்பது சிலருக்குப் பிடிக்கும். சிலர் அப்படியே கலைந்த நிலையிலேயே விட்டுவிடுவர். மேலும் சுத்தமான பெட்ஷீட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம். அழகாக மடித்து அடுக்கினாலும் அழுக்காக இருந்தால் அதில் பூச்சிகள் குடியேறிவிடும்.

எனவே வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது பெட்ஷீட் மற்றும் தலையணை உறைகளை துவைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்