சமையல் அறையில் கட்டாயம் செய்ய கூடாத இந்த விடயங்கள் குறித்து தெரியுமா? மீறினால் ஏற்படும் ஆபத்துகள் இவைதான்

Report Print Raju Raju in வாழ்க்கை முறை
3430Shares

வீட்டில் இருக்கும் மற்ற அறைகளை விட அதிக கவனமாக இருக்க வேண்டிய இடம் சமையல் அறை தான். பலவித விபரீதங்கள் இந்த சமையல் அறையில் தான் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

சமையல் அறையில இருக்கும் உணவு பொருட்கள் முதல் பயன்படுத்த கூடிய பாத்திரங்கள் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சமையல் அறையில் எதையெல்லாம் செய்ய கூடாது என்பது குறித்து காண்போம்.

நான்-ஸ்டிக் பாத்திரங்கள்

முன்பெல்லாம் எல்லா வகையான சமையலையும் மண் பாத்திரத்தில் செய்து வந்தோம் ஆனால், இப்போது இந்த நிலை முற்றிலுமாக மாறி விட்டது. தற்போதைய ட்ரெண்டில் மக்கள் non-stick பாத்திரங்களை தான் அதிக அளவில் உபயோகப் படுத்துகின்றனர். இது போன்ற பாத்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வியர்வை

சமைக்கின்ற அறையில் ஒரு எக்ஸ்ஹாஸ்டீ ஃபேன் ஆவது இருப்பது நல்லது. அப்போது தான் வியர்வை குறைவான அளவில் வெளியேறும். இல்லையேல் இவை சமைக்கும் உணவுகளிலும் கலந்து, அவர்களுக்கும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

காய்கறி நறுக்குதல்

காய்கறிகளை அரிவாள்மணையில் அரிந்த காலம் மலையேறி போய் விட்டது. இப்போதெல்லாம் இதற்கு மாறாக கத்தி போன்றவற்றை வைத்து உணவு பொருட்களை நறுக்குக்கின்றனர். அவ்வாறு நறுக்கிய பின் அந்த பலகையை கத்தியால் சொரண்ட கூடாது. இதனால் அவற்றில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உணவுடன் கலந்து உயிருக்கே ஆபத்தாகி விடும்.

சூடு செய்தல்

சமைத்த 12 மணி நேரத்திற்குள் உணவை சாப்பிட்டு விட வேண்டும். இல்லையேல் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து சக்கைக்கு சமமாக மாறி விடும். மேலும், ஒரு முறை சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிட கூடாது. மேலும், இது புற்றுநோய் அபாயத்தை கூட உண்டாக்கும்.

சுத்தம்

சமைக்கும் போது அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியது சுத்தத்தை பற்றி தான். குறைந்தபட்ச சுத்தமாவது இருத்தல் வேண்டும். இல்லையேல் இது சமைப்போரையும் அதை சாப்பிடுவோரையும் சேர்த்தே பாதிக்கும். குறிப்பாக தும்பல், இரும்பல் போன்றவை ஏற்படும் போது கைக்குட்டையை பயன்படுத்துவது சிறப்பு.

கத்தி

பலரும் கத்தியை பயன்படுத்தும் போது மிகவும் அஜாக்கிரதையாக கையாளுகின்றனர். இது அவருக்கும் அவரை சார்ந்தவருக்கும் ஆபத்தை தரும். குறிப்பாக கீழே விழ போகும் கத்தியை ஒரு போதும் கையால் பிடிக்க நினைக்காதீர். இது உங்கள் கையை ஆழமாக கிழித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்