சப்போட்டாவில் இவ்வளவு நன்மைகளா? நீங்களே அசந்துடுவீங்க…

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை

இயற்கையின் கொடையில் சப்பேட்டோ மரம் மிகவும் அற்புதமானது. சப்போட்டோ கொத்துக்கொத்தாக முடி கொட்டுகிறவர்கள் சப்போட்டோவை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி கொட்டும் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

சப்போட்டா சத்தான பழம் மட்டும் அல்ல. நம் சருமத்தையும் மிருதுவாக்கும் தன்மை சப்போட்டாவிற்கு உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாம் இளமையாக இருக்க வேண்டும் என்றால் சப்போட்டோவை தொடர்ந்து சாப்பிடலாம்.

சப்போட்டா உடம்பில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பு கரைக்கும். 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும் சக்தி உள்ளது.

சப்போட்டா அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலை பொலிவாக்க

  • சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைத்து, அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடரை கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளித்தால் உடலை சப்பட்டோ பொலிவாக்கிடும்.
  • ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது எடுத்து, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வந்தால் வறட்சி நீங்கி மென்மை கிடைக்கும்.

கொழு கொழு கன்னங்களுக்கு

சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து முகத்தில் பூசி வந்தால் விரைவில் கொழுகொழு கன்னம் கிடைக்கும். வாரம் இருமுறை இதுபோல செய்தால் போதும்.

இரவில் நன்றான உறக்கத்திற்கு

சப்போட்டா ஜூஸ் இரவு தூக்கும் 2 மணிக்கு முன்னர் குடித்தால் இரவில் நன்றாக தூக்கம் தரும்.

காய்ச்சல் சரியாக

பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், காய்ச்சல் சரியாகும்.

பித்தம் சரியாக

சப்போட்டா பித்தத்தினால் ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்துகிறது.

சப்போட்டாவை சாப்பிட்டு ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் சரியாகும்.

முடி கொட்டும் பிரச்சனைக்கு

சப்போட்டா கொட்டை தைலம், ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடர், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து மிதமாக காய்ச்சி வடிகட்டி, இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைத்து ஷாம்பு போட்டு குளித்தால் முடி கொட்டுவது சரியாகும்.

மற்ற பலன்கள்
  • சப்போட்டா பழ ஜூசுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை உடனே சரியாகும்.
  • இதயம் சம்பந்தமான கோளாறுகள் இருப்பவர்கள் சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய பிரச்சினையிலிருந்து பாதுகாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால் இரத்தபேதி குணமாகும்.
  • கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைத்து, தாகத்தை தணிக்கும் தன்மை சப்போட்டாவைக்கு உள்ளது.
  • ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வந்தால் இந்த நோய் குணமாகும்.
  • சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்