நீங்கள் 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா? இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஜோதிடப்படி எந்த எண்ணில் பிறந்தவர்கள், எந்த எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்கள், யாரை திருமணம் செய்யலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் எந்த எண்காரர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தற்போது பார்ப்போம்.

1 ஆம் எண்

1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம்.

1-ம் எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். எண் 1 சூரியன் அடுத்தவர்க்கும் தனது இணையும் சூரியன் அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சனைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.

திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்வது சிறப்பு.

1 கூட்டுத்தொகை வருபவர்கள் 8 ஆம் கூட்டுத்தொகை வருபவர்களை ஏறெடுத்தும் பார்க்காதீங்க. வாழ்க்கையே நரகமாகிவிடும்.

2 ஆம் எண்

2,11,20,29 ம் தேதியில் பிறந்த ஆண்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள்.

இருப்பினும் 7ஆம் தேதி பிறந்த பெண்ணே மிகவும் சிறந்தவள். ஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும்.

1-ம் எண்ணில் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். அதே நேரம் நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.

3 ஆம் எண்

3,12,21,30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும்.

2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.

4 ஆம் எண்

4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.

4ஆம் தேதி பிறந்த ஆண்கள், 6ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.

இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.

5 ஆம் எண்

5,14,23 ம் தேதியில் பிறந்தவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல் செய்வார்கள். 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள்.

1, 3, 6 பிறந்தவர்களையும் திருமணம் செய்யலாம்.

9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு.

எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

6 ஆம் எண்

6,15,24 ம் தேதிகளில் பிறந்த ஆண்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களை தவிர்த்துவிட வேண்டும். அதே போல 3-ஆம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.

காரணம் 6 ஆம் எண் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றது. 3 குரு ஆதிக்கம் பெற்றது. குரு சுக்கிரனுக்கு ஆகவே ஆகாது.

திருமண தேதியை 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் நன்மை ஏற்படும்.

7ஆம் எண்

7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் இனிய இல்லறம் அமையும்.

8ஆம் தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், திருமண வாழ்க்கையே கசந்துவிடும்.

திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது! 9ம் எண் நடுத்தரமானது தான்.

8 ஆம் எண்

8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை யோசித்து மணந்து கொள்ளலாம்.

8ஆம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

9ஆம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.

9 ஆம் எண்

9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள்.

செவ்வாயின் ஆதிக்க பெற்ற இந்த எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்கள் தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும்.

குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.

2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்து நொந்து நூலாகி விடுவீர்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...