இந்த ஆறு ராசிக்காரங்களுக்கு மட்டும் தான் காதலில் எப்பவும் அதிர்ஷ்டம் இருக்குமாம்! இதில் உங்கள் ராசியும் இருக்கா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை

12 ராசியில் எந்தெந்த ராசிக்காரர்கள் சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பார்கள் என்று பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பார்கள். காதல் விஷயங்களை பொறுத்தவரை இவர்களின் ஆறாவது அறிவு எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும்.

மகர ராசிக்காரர்கள் மனிதர்களை படிக்க முடியும், எனவே இவர்கள் உணமையான நல்லவர்களையும், பாசாங்கு செய்பவர்களையும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள்.

மகர ராசிக்காரர்கள் ஒரு மோசமான நகைச்சுவை உணர்வைக் கொண்டுள்ளனர், தங்கள் துணையிடமும் இதைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

நெருக்கடி காலங்களில் ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருக்கும் ஒருவரை அவர்கள் விரும்புவார்கள். எனவே இவர்கள் ஒருவரை தேர்ந்தடுக்கும் போது அவர்கள் இந்த அனைத்து குணங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மீனம்

ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அத்தியாவசியமாக நினைக்கும் விஷயங்களில் காதலும், ரொமான்ஸும் எப்பொழுதும் இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக யார் உண்மையில் அவர்களை காதலிப்பார்கள் என்பதை உள்ளுணர்வு இவர்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு உள்ளுணர்வு மற்றும் மற்றவர்களின் உண்மையான நோக்கம் என்பதை கண்டறியும் திறன் இயற்கையாகவே இருக்கும்.

தன்னுடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இவர்கள் விரைவாகவே புரிந்து கொள்வார்கள்.

மீன ராசிக்காரர்கள் தங்கள் உள்ளுணர்வை பின்பற்றும்போது அது அவர்களின் உண்மையான காதலை நோக்கி அழைத்துச் செல்லும். மாறாக மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுக்கும் இவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தங்களின் காதல் மற்றும் திருமண விஷயங்களில் அருமையான ரசனை கொண்டவர்கள்.

இதற்கு காரணம் அவர்களின் ராசி மட்டுமல்ல, அவர்களுக்கான சரியான நபரை தேர்ந்தெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வதுதான். அதிக உணர்திறனும், புத்திசாலித்தனமும் கொண்ட இவர்கள் தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்.

இவர்கள் தங்களின் இதயம் சொல்வதை கேட்பவர்கள், மற்றவர்களின் கண்களுக்கு தெரியாத தவறுகளை கூட இவர்கள் கவனிப்பார்கள்.

தங்களுக்கு பொருத்தமானவர்கள் என்று தோன்றும் வரை இவர்கள் ஒருபோதும் தங்கள் முடிவை வெளிப்படுத்தமாட்டார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு காதல் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் சிறந்த ரசனை இருக்கும். ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே அவர்களைப் பற்றிய ஒரு கணிப்புக்கு இவர்கள் வந்துவிடுவார்கள். ஒருவரைப் பற்றிய அனைத்து நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகளையும் இவர்கள் ஆராய்வார்கள்.

இவர்கள் விஷயங்களை இலகுவாகச் செய்ய மாட்டார்கள், அவர்கள் ஒருவரின் மீது ஆர்வம் காட்டும்போது அவர்கள்தான் தங்களுக்கானவர்கள் என்று முடிவெடுத்து இருப்பார்கள்.

இவர்கள் பெர்பெக்ட்டானவர்களை எதிர்பார்க்கமாட்டார்கள், தனக்கு பொருத்தமானவர்களைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

இவர்கள் இறுதி முடிவு எப்பொழுதும் இவர்களுக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும்.

கடகம்

அன்பும், குடும்பமும் தான் கடக ராசிகாரர்களுக்கு எல்லாமே, எனவே அதனை பாதிக்கும் எவருடனும் இவர்கள் காதலில் ஈடுபடமாட்டார்கள்.

இவர்களை வழிநடத்துவது இவர்களின் உள்ளுணர்வுதான், இவர்களின் உள்ளுணர்வே இவர்களை சரியான நபரிடம் அழைத்துச்செல்லும்.

கடக ராசிக்காரர்கள் தங்களின் துணை இரக்கமுள்ளவர்களாகவும், ஆக்கபூர்வமானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

இவர்களை ஆச்சரியப்படுத்தாத எவருடனும் இவர்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். இவர்கள் காதலில் இருக்கும்போது அதில் முழு அர்பணிப்புடன் இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சி வசப்படுபவர்களில் ஒருவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக புத்திசாலித்தனமானவர்களில் இவர்கள் கண்டிப்பாக ஒருவராக இருப்பார்கள்.

இதனால் இவர்களின் காதல் முடிவுகளில் எப்பொழுதும் தெளிவாக இருப்பார்கள். நீண்டகால பழக்கத்திற்குப் பிறகு தான் இவர்கள் தங்கள் காதலை உறுதி செய்வார்கள்.

இவர்கள் தேர்ந்தெடுப்பவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

வேடிக்கையான, கனிவான, சுவாரஸ்யமான, ஆக்கபூர்வமான மற்றும் சிந்தனை மிக்கவர்களை இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். சரியான காதலை தேர்ந்தெடுக்க இவர்களுக்கென தனி பார்முலா இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...