இந்த ராசிக்காரர்களிடம் கொஞ்சம் உஷாரா இருங்க.. மூர்க்கமாக கோபப்படுவார்களாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஜோதிடப்படி ஒருவரது பிறந்த ராசி கூட அவர்களது கோபத்திற்கு காரணமாக அமைகின்றது.

அந்தவகையில் தற்போது 12 ராசியில் எந்தெந்த ராசிக்காரர்கள் மூர்க்கமாக கோபப்படுவார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும்போது அதனை சுற்றியிருக்கும் அனைவரும் அறிவார்கள், தங்கள் கோபத்தை ஒருபோதும் இவர்கள் அடக்கி வைக்கமாட்டார்கள்.

இவர்களின் ஆற்றலும், வேகமும் கோபமாக மாறும்போது அது மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும். கோபமாக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் அருகில் இருப்பது என்பது கன்னிவெடி மீது கால் வைப்பது போன்றதாகும்.

இவர்கள் தங்களின் கோபத்தையும், விரக்தியையும் ஒருபோதும் மறைத்து வைக்கமாட்டார்கள். கோபம் வந்துவிட்டால் இருக்குமிடம், சூழ்நிலை என எதையும் இவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள், வெடித்து சிதறிவிடுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் சின்னமே காளைதான், எனவே அவர்கள் எவ்வளவு கோபப்படுவார்கள் என்பதை எந்த அளவுகோலாலும் அளவிட முடியாது.

கோபத்தில் இருக்கும் போது இவர்கள் வன்முறையாகவும், வெறித்தனமாகவும் நடக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இவர்கள் எப்போதாவதுதான் மற்றவர்களின் பேச்சை கேட்பார்கள், இவர்களின் பிடிவாதம் அனைவர்க்கும் எரிச்சலூட்டுவதாக இருக்கும். தங்களின் கோபம் இவர்களுக்கு எப்போதுமே நியாயமானதாகத்தான் தெரியும்.

இவர்கள் கோபத்தில் இருக்கும்போது இவர்களை சமாதானப்படுத்த முயலாமல் இருப்பதே நல்லது, ஏனெனில் சிறிது நேரத்தில் இவர்களின் கோபம் குறைந்துவிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களின் தோற்றத்தை வைத்து அவர்கள் மிகவும் அமைதியானவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஏனெனில் கோபத்தின் போது இவர்கள் மிகவும் மூர்கத்தனமாவர்களாக மாறிவிடுவார்கள்.

பொதுவாக இவர்கள் கோபப்படும் போது முதலில் எச்சரிக்கை கொடுப்பார்கள், அதை கவனிக்காவிட்டால் வெடித்து சிதறுவார்கள்.

கோபத்தை வெளிப்படுத்தும் போது இவர்கள் வெடித்துச் சிதறும் எரிமலை போல இருப்பார்கள், இவர்களின் கோபம் அனைவரையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும்.

இவர்களின் கோபம் அவ்வளவு விரைவில் குறையாது, இவர்கள் எவ்வளவு அன்பாக இருக்கிறார்களோ அதேயளவிற்கு கோபப்படவும் செய்வார்கள். இவர்களின் கோபத்தில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்துவார்கள். இவர்களின் கோபம் வெறும் கோபமாக இருக்காது ஆத்திரமாக இருக்கும். தங்களின் கோபத்தை கத்துவதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

யார்மேல் கோபமோ அவர்களை என்ன செய்யவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். கோபத்தில் இருக்கும்போது தங்களின் கருத்தில் இருந்து இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.

மற்றவர்களின் மீது அதிகாரத்தை காட்டுவதற்கு தங்களின் கோபத்தை இவர்கள் பயன்படுத்துவார்கள்.

விருச்சிகம்

பொதுவாக விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் கோபத்தையும், மனக்கசப்பையும் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள்.

ஆனால் இவர்களின் கோபம் மிகவும் ஆபத்தானதாகும், மனதில் வஞ்சம் வைத்து அதற்காக சரியான சமயத்தில் கோபத்தை வெளிப்படுத்தி பழிவாங்குவார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் மீது கோபமாக இருப்பதை உங்களால் அறிந்து கொள்ளவே முடியாது, ஆனால் அவர்களால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அவர்கள் உங்கள் மீது எவ்வளவு கோபமாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இது இவர்களிடம் இருக்கும் மோசமான குணமாகும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்