இந்த ராசிக்காரர்களும் எந்தவொரு செயலையும் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பவராக இருப்பார்களாம்..!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குள்ளும் ஒவ்வொரு குணமுண்டு.

அந்தவகையில் 12 ராசிகளில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்களைக் காட்டிலும் எப்போதும் வித்தியாசமாகவும் எந்தவொரு செயலையும் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பவராகவும் இருப்பார்கள் என்று பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கனிவானவர்கள், உதவி செய்யக்கூடியவர்கள் மேலும் புத்திசாலிகள் என்பதால் இவர்கள் இயற்கையாகவே நுண்ணறிவு உடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் விஷேசமாகவோ, தனித்துவமாகவோ எதையும் செய்யமாட்டார்கள், ஆனால் அனைவரையும் ஆழமாக கவனிப்பார்கள்.

மேலோட்டமாக எதையும் கவனித்து இவர்கள் முடிவெடுக்க மாட்டார்கள். மற்றவர்கள் கூறும் அனைத்தையும் உடனடியாக நம்பும் பழக்கம் இவர்களுக்கு இருக்காது.

மற்றவர்கள் கூறும் சாதாரண வார்த்தைகள் கூட இவர்களின் வாழ்க்கையை மாற்றுவதாக இருக்கும்.

மிதுனம்

மேலோட்டமானவற்றைப் பெறுவதற்கும், உண்மையில் ஒருவருக்குள் என்ன நடக்கிறது என்பதையும் இவர்கள் அறிவார்கள்.

இவர்களுக்கென ஒரு சிறப்புப்பார்வை உள்ளது, மற்றவர்கள் எப்போதும் மிதுன ராசிக்காரரை நம்புவார்கள். மற்றவர்களுக்கு அவர்களைப் பற்றி தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ள அனைவரும் இவர்களை நாடுவார்கள்.

மிதுன ராசிக்காரர்கள் நுண்ணறிவு உள்ளவர்கள் மட்டுமல்ல, அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் நன்கு அறிந்தவர்கள்.

இவர்கள் மிகவும் திறந்த மனத்துடையவர்கள், இவர்களின் நுண்ணறிவுக்கு இதுவும் ஒரு சிறந்த காரணமாகும்.

துலாம்

அனைத்து விஷயங்களையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது துலாம் ராசிக்காரர்களின் கைவந்த கலையாகும். இவர்களின் எண்ணம் எப்பொழுதும் நீதியைப் பற்றியதாக இருக்கும்.

அனைவரும் சொல்கிறார்கள் என்பதற்காக இவர்கள் எதையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தவொரு விஷயமும் தனக்கு ஏற்றதாக இருக்குமா? இல்லையா?என்பதை சிந்தித்து பார்ப்பார்கள்.

மற்றவர்களுக்கும் அந்த வழியால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி சிந்திப்பார்கள்.

நுண்ணறிவு என்பது இவர்களின் செயல்பாடு அல்ல, அது இவர்களுடன் பிறந்தது ஆகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிறழ்ச்சியால் பாதிக்கப்படாத வண்ணம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இது மற்றவர்களின் மனதை இவர்களை நன்கு அறிந்துகொள்ள உதவுகிறது.

இவர்களின் கூற்றுகள் மற்றவர்களுக்கு திருப்புமுனையாக இருக்கும். இவர்கள் கருத்துக்களை கூறும் விதம் அனைவருக்கும் ஆழமான புரிதலை ஏற்படுத்தும்.

இவர்களுடனான உரையாடல் முதலில் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் ஆனால் யோசித்து பார்த்தால் இவர்கள் கூறும் அனைத்தும் சரியானதாகவே இருக்கும்.

மீனம்

தாங்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பது மீன ராசிக்காரர்களுக்கே தெரியாது, இவர்களின் புலனாய்வுத் திறனை கொண்டு இவர்கள் ஒரு விஷயத்தை கண்டறியும் போது மற்றவர்கள் அடையும் அதே ஆச்சரியத்தை இவர்களும் அடைவார்கள்.

இவர்களின் உள்ளுணர்வு இவர்களுக்கு நம்ப முடியாத புத்திசாலித்தனத்தை வழங்கும், மேலும் மற்ற உயிரனங்களின் உணர்வை இவர்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

இவர்கள் ஆக்கபூர்வமானவர்கள், எனவே இவர்கள் விஷயங்களை மற்றவர்கள் போல பார்க்கமாட்டார்கள். எந்தவொரு விஷயத்தையும் இவர்கள் மேலோட்டமாக பார்க்க மாட்டார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்