மூன்று மனைவிகள் மற்றும் 15 குழந்தைகளோடு வாழும் நபர்! இன்னும் குழந்தைகள் வேண்டும் என அடம்

Report Print Raju Raju in வாழ்க்கை முறை

இந்தியாவில் மூன்று மனைவிகள் மற்றும் 15 குழந்தைகளுடன் வாழும் ஆணுக்கு குடும்ப கட்டுபாடு என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கும் நிலையில் இன்னும் குழந்தைகள் பிறந்தால் மகிழ்ச்சியடைவேன் என கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பவுதியன் கலன் கிராமத்தில் மொத்தம் 6000 பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஷெரீப். இவருக்கு மூன்று மனைவி மற்றும் 15 பிள்ளைகள் உள்ளனர் என்பது தான் ஆச்சரியம்.

ஷெரீப் கூறுகையில், எனக்கு 14 வயதிருக்கும் போது ஜட்டா பேகம் என்ற பெண்ணுடன் கடந்த 1987ஆம் ஆண்டு முதல் திருமணம் நடந்தது.

பேகம் மூலம் எனக்கு மூன்று மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர்.

பின்னர் 90களில் நூர் என்ற பெண்ணை சந்தித்து மணந்தேன். அவள் மூலம் நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இதையடுத்து 2000ஆம் ஆண்டில் தரனூம் பேகம் என்ற நேபாள பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அவள் மூலம் ஒரு மகன் மற்றும் மகள் பிறந்தனர்.

எனக்கு என்னுடைய எல்லா பிள்ளைகளின் பெயர்களும் தெரியாது, மூத்த மகனுக்கு 24 வயதாகிறது, இளைய மகளுக்கு 2 வயதாகிறது.

இது போல அன்பான குடும்பத்தை பெற்றதை கடவுள் எனக்கு கொடுத்த ஆசிர்வாதமாக கருதுகிறேன்.

நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம், முக்கியமாக என் மனைவிகளுக்கு இடையில் சண்டையே வந்ததில்லை.

விவசாயம் செய்வது மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்துகிறேன் என கூறியுள்ளார்.

ஷெரீப்புக்கு குடும்ப கட்டுபாடு என்ற ஒரு விடயம் இருப்பதே தெரியாதாம். குழந்தைகள் கடவுள் கொடுக்கும் பரிசு என கூறும் அவர் இன்னும் குழந்தைகள் பிறந்தால் மகிழ்ச்சியடைவேன் என கூறி அதிரவைத்துள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்