உங்க காதலி இந்த ராசியா! அப்படினா நீங்க தான் அதிஷ்டசாலியாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

12 ராசிகளில் ஐந்தாவது இடத்தில் சிம்ம ராசி உள்ளது.

ஒவ்வொரு ராசிக்களும் ஒவ்வொரு சிறப்பான தன்மை உண்டு. இதில் சிம்ம ராசி சிங்கத்தின் இலட்சினையை கொண்டதால் அது இன்னும் சிறப்பு வாய்தாக கருதப்படுகின்றது.

அந்த வகையில் ஜோதிடப்படி சிம்ம ராசி பெண்களுக்கு என்று ஒருமித்த சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றது.

அவை காதலில் எப்படி இருக்கிறது? இவர்களை காதலிக்கும் ஆண்களுக்கு என்ன அதிரஷ்டம் உள்ளது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

சிம்ம இராசி பெண்களும் காதலும்

சிம்ம ராசி பெண்களிடம் பொதுவாகவே அறிவுக் கூர்மை அதிகம்.

மேலும் படைப்பாற்றல், நகைச்சுவை ஆற்றல் கொண்டவர்களாக இவர்கள் திகழ்வார்கள். இவர்கள் எங்கிருந்தாலும் தனக்கானவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.

புத்தகங்கள் மற்றும் படங்களில் உள்ள கனவு வாழ்க்கையை கூட இவர்கள் உண்மையாக மாற்றும் திறமையை கொண்டவர்களாக திகழ்வார்கள். சிம்ம ராசி பெண்கள் மிகவும் அதிகமாக காதலிப்பார்கள்.

நீங்கள் ஒரு மடங்கு எதிர்பார்த்தால், அவர்களிடம் இருந்து ஆயிரம் மடங்கு எதிரொலிக்கும். சிம்ம ராசி பெண்கள் ஒரே மாதிரியான சுழற்சியான வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு நாளுமே இவர்கள் புதிய புதியதாய் வாழ விரும்புவார்கள்.

தாம்பத்தியத்தில் ஆண்களுக்கு நிகராக ஈடுபடும் திறன் கொண்டவராக சிம்ம ராசி பெண்கள் திகழ்வார்கள். எனவே சிம்ம இராசி பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் அதிர்ஷ்டசாலி தான்.

சிம்ம ராசி கொண்ட பெண்கள் உடை உடுத்துவதில் இருந்து, தாங்கள் செய்யும் சிறிய விடயங்களில் கூட அழகாக ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.

தங்களின் துணையை திடீரென ஆச்சரியப்படுத்துவதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். ஆனால் அது பரிசாக மட்டுமில்லாமல், அவர்களின் துணை எதிர்பார்த்த விடயமாகக் கூட இருக்கலாம்.

சிம்ம ராசி பெண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுவதில் எவ்வித குழப்பமும் கொள்ளாமல், யாரையும் சந்தேகிக்கும் குணத்தை கொள்ளாமலும் இருப்பார்கள்.

தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் குணத்தைக் கொண்டவர்களாக சிம்ம ராசி பெண்கள் இருப்பார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்