மோதிர விரல் நடுவிரலை விட நீளமாக இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆணின் வலது கையும், பெண்ணின் இடது கையும் ஜோதிடத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது நம்பிக்கை ஆகும்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீளத்திலும், வடிவத்திலும் இருக்கும். உங்கள் விரலின் நீளங்கள் மட்டுமின்றி அவற்றின் சில பண்புகளும் அவற்றை வித்தியாசப்படுத்தி காட்டும்.

அந்தவகையில் உங்கள் விரல்கள் உங்களை பற்றி என்னென்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

நடுவிரலும் மோதிர விரலும்

உங்களின் நடுவிரலானது சனி கிரகத்துடன் தொடர்புடையது. நடுவிரல் மிகவும் நீளமாக இருப்பவர்கள் அசாதாரணமான அதேசமயம் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

நடுவிரல் மிகவும் நீளமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல அவமானங்களை சந்திக்க நேரிடும்.

ஒருவேளை மோதிர விரலும், நடுவிரலும் ஒரே நீளத்தில் இருந்தால் அவர்களால் சரியான முடிவெடுக்க இயலாது. மிகவும் சோம்பேறியாக இருப்பார்கள்.

மோதிர விரல்

உங்களின் நடுவிரல் மோதிர விரலை விட நான்கில் ஒருமடங்கு பெரியதாக இருந்தால் அது நல்லதாகும்.

அவர்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை அடைவார்கள். ஒருவேளை மோதிர விரல் நடுவிரலை விட நீளமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

மோதிர விரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் இடைவெளி மிகவும் குறைவாக இருந்தால் அவர்கள் அதிக சுதந்திரமானவர்களாக இருப்பார்கள்.

அதேசமயம் இடைவெளி மிகவம் அதிகமாக இருந்தால் அவர்கள் அதிக அலட்சிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுண்டு விரலும் மோதிர விரலும்

ஒருவேளை சுண்டு விரலானது மோதிர விரலின் நகம் வரை நீளமாக சென்றால் அவர்கள் வாழ்க்கையில் தெளிவான இலட்சியம் உடையவர்களாய் இருப்பார்கள்.

இவர்கள் சிறந்த மருத்துவர்களாய் வர வாய்ப்புள்ளது. இந்த அமைப்புடையவர்கள் அதிர்ஷ்டமும், செல்வமும் உடையவர்களாக இருப்பார்கள்.

ஒருகட்டத்தில் வாழ்க்கையில் பணமழையில் நனைவார்கள்.

விரலின் நீளம்

ஆள்காட்டி விரலும், நடுவிரலும் ஒரே நீளத்தில் இருந்தால் அவர்கள் சுதந்திரத்தை அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள்.

தங்களின் வாழ்க்கையில் யாரும் குறுக்கிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள்.

அனைத்து விரல்களும் நீளமாக இருப்பவர்கள் அவர்கள் காதல் மற்றும் பொறுமை அனைத்தும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பிடிவாத குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

துரதிர்ஷ்டம்

ஆள்காட்டி விரல் நடுவிரலை நோக்கி வளைந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் துரதிர்ஷ்டம் நிறைந்திருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்