ஆண்களே! இந்த அடையாளம் உள்ள பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் ஏற்படுமாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

சாமுத்ரிகா சாஸ்திரம் என்பது ஒருவரின் முகம், உடல் மற்றும் ஆரா போன்றவற்றை கொண்டு அவர்களின் எதிர்காலத்தைக் கண்டறியும் முறை ஆகும்.

அதில் ஸ்திரி சாமுத்ரிகா சாஸ்திரம் பெண்களின் குணம் மற்றும் பெண்களின் உடல் அம்சங்கள் அவர்களின் குணத்தை பற்றி அறிய உதவுகிறது.

அந்தவகையில் ஆண்கள் எந்த அடையாள பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

பாதம்

பெண்களின் பாதம் மென்மையாகவும், நன்கு வளர்ந்து முழுமையாகவும், இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமாகவும், அதிக வியர்வையும் இல்லாமல் இருந்தால் அவர்கள் உடலுறவில் சிறந்து விளங்குவார்கள்.

இதற்கு எதிராக அறிகுறிகள் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பார்கள்.

பெண்களின் காலில் சங்கு, சக்கரம், தாமரை, மீன் போன்றவை இருந்தால் அவர்கள் ராஜா போன்றவர்களை மணந்து கொள்ளும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.

நகங்கள்

இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமான, மென்மையான, நல்ல வடிவத்தில் இருக்கும் நகங்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும். உடைந்த அல்லது கருப்பு நகங்கள் துன்பத்தை குறிக்கும்.

பாதத்தின் நீளம்

பாதத்தின் நீளம் சிறியதாக இருப்பது குறுகிய ஆயுளை குறிக்கும். தட்டையான உள்ளங்கால் அடிமைத்தனம் மற்றும் வறுமையின் அடையாளமாகும்.

உள்ளங்கால் ஒழுங்கற்ற முறையில் இருந்தால் அவர்கள் அந்த பெண்ணுக்கு வஞ்சக குணம் அதிகமாக இருக்கும். உள்ளங்காலில் வளைவு அதிகமாக இருந்தால் அவர்கள் சராசரி வாழ்க்கையை வாழ்வார்கள்.

சுண்டு விரல்

பெண்ணின் காலின் சுண்டு விரல் பூமியில் படாமல் இருந்தால் அந்த பெண்ணிற்கு இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. காலின் இரண்டாவது விரல் கட்டை விரலை விட நீளமாக இருந்தால் அவர்கள் திருமணத்திற்கு முன்னும், பின்னும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மூன்றாவது விரலும், நான்காவது விரலும் பூமியில் படவில்லை என்றால் அவர்கள் விதவையாக வாய்ப்புள்ளது. நடக்கும் போது பெண்கள் தூசியை உதறி நடப்பது அவர்களின் மோசமான குணத்தை குறிக்கும், இவர்களால் அவர்களின் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும்.

கால்களின் பின்புறம்

கணுக்காலின் சருமம் நரம்புகள் வெளியே தெரியாமல் மென்மையாக இருந்தால் அவர்கள் ராணி போன்ற வாழ்க்கை வாழ்வார்கள்.

கணுக்காலை சுற்றியுள்ள பகுதியில் முடி இருந்தால் அவர்கள் நீண்டகால அடிமைத்தனத்தில் இருப்பார்கள். கால்களில் தசைகள் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.

குதிகால்

குதிகால் கூட ஒரு பெண்ணின் தோழமையை பற்றிக் கூறும். அது உறுதியானவையாக இருந்தால் அவர்கள் பாலியல் உறவில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். குதிகால் பெரியதாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை துயரம் நிறைந்ததாக இருக்கும்.

கால்கள்(முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி)

இந்த இடத்தில் சருமம் மென்மையாகவும், அதிக முடிகளும் இல்லாமலும் இருந்தால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

முழங்கால்கள்

பெண்களுக்கு வட்டமான, மென்மையான, அழகிய முழங்கால்கள் இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் காந்தமாக இருப்பார்கள். தளர்வான, சதைகள் இல்லாத முழங்கால்கள் அவர்களின் துரதிர்ஷ்டத்தை குறிக்கும்.

இடுப்பு

நன்கு செழிப்பான 24 விரல்களின் நீளத்தை தாண்டாத சுற்றளவுடன் பெண்கள் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும், செல்வத்திற்கும் எந்த குறையும் இருக்காது.

தட்டையான, சதைகள் இல்லாத, நீண்ட இடுப்பு கொண்ட பெண்கள் வாழ்க்கையில் அதிக துன்பத்தை சந்திப்பார்கள்.

கட்டைவிரல்

பெண்ணின் கட்டைவிரல் தாமரை மொட்டு போல இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கை ராஜயோகம் நிறைந்ததாக இருக்கும். வளைந்த, தசைகளற்ற கட்டைவிரல் துரதிர்ஷ்டத்தை குறிக்கும்.

உள்ளங்கை

பெண்ணின் உள்ளங்கை சிவப்பாக, நடுவில் உயர்ந்து, விரல்களுக்கிடையே சீரான இடைவெளியும் இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள்.

கையின் பின்புறம்

கையின் பின்புற தசைகள் மென்மையாகவும், முடிகள் இல்லாமலும், சரியான வடிவத்திலும் இருந்தால் அவர்களை திருமணம் செய்ய போகிறவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

சருமம் உலர்ந்தும், கோடுகளுடனும் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் சில போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

நகங்கள்

பெண்களின் விரல்கள் இயற்கையான பிங்க் நிறத்தை கொண்டிருந்தால் அவர்கள் இரக்கமும், அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேசமயம் நகங்கள் சிறிது மஞ்சள் கலந்து ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தால் அவர்கள் மிகவும் கொடூர குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கழுத்து

பெண்கள் கழுத்தில் மென்மையான சருமத்துடனும், எலும்புகள் தெரியா வண்ணம், 3 கோடுகள் தெரியும் படி இருந்தால் அவர்கள் சிறந்த மனைவியாகவும், தாயாகவும் இருப்பார்கள். தட்டையான, சதைகளற்ற கழுத்து குழந்தையின்மையை குறிக்கும்.

கண்கள்

பெண்களின் கண்ணின் நிறம் ஒரே நிறத்திலும் அதனை சுற்றி பசும்பாலை பாலை போல வெள்ளை நிறமும் இருந்தால் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய பெண்ணாக இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

நெற்றி

நரம்புகளும், முடிகளும் இல்லாமல் பிறை நிலவை போல 4 விரல்கள் வைக்கக்கூடிய அளவிற்கு இடைவெளியுடன் நெற்றி இருக்கும் பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வார்கள். முன்னேற்றியில் அதிக முடி இருப்பது துரதிர்ஷ்டமாகும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்