ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் கையில் இந்த சின்னம் இருந்தால் ராஜவாழ்க்கை காத்திருக்குதாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

நமது கையில் இருக்கும் சில அடையாளங்கள் சிவன் மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

அந்த வகையில் உங்கள் கையிலிருக்கும் இந்த அடையாளங்கள் எளிதில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகின்றது.

தற்போது எந்த எந்த சின்னங்கள் நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தர போகுது என்று பார்ப்போம்.

முக்கோணம்

உங்கள் கையில் முக்கோணம் அடையாளம் இருந்தால் அது உங்களுடைய சிறப்பு திறமையின் அடையாளமாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் கையில் முக்கோண சின்னம் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றியையும், புகழையும் குவிப்பீர்கள்.

திரிசூலம்

இந்த அடையாளம் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் சிவனால் நேரடியாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். திரிசூலம் உங்களை அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும். அணைத்து சவால்களையும் சந்திக்கும் சக்தி உங்களிடம் இருக்கும்.

நட்சத்திரம்

கையில் நட்சத்திர சின்னம் இருப்பவர்களுக்கு சில தனிப்பட்ட வித்தியாசமான திறமைகள் இருக்கும். உதாரணத்திற்கு வேதங்களை இவர்களால் எளிதாக படிக்க முடியும்.

இவர்கள் துறைசார்ந்த வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி வெற்றியை ஈட்டுவார்கள்.

வைரம்

உங்கள் கையில் வைரத்தின் சின்னம் இருந்தால் நீங்கள் நீங்கள் பல்வேறு வித்தியாசமான வழிகளில் வாழ விரும்புவீர்கள் பல பரிசோதனை முயற்சிகளை செய்வீர்கள். உங்க வாழ்க்கையில் எப்பொழுதும் சாகசத்திற்கான தேடுதல் இருக்கும்.

பிறை வடிவம்

உங்கள் கையில் பிறை வடிவம் இருந்தால் உங்களுக்கு உள்ளுணர்வு மிகவும் அதிகமாக இருக்கும்.

உங்களால் வருங்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணிக்க இயலும், மற்றவர்கள் சரியாக எடைபோடுவதில் வல்லவர்களாக இருப்பீர்கள்.

வர்கம்

இந்த சின்னம் உங்கள் கையில் இருந்தால் உங்களால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடங்கல்களையும் கடந்து விடுவீர்கள்.

இந்த சின்னத்தால் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது.

கூட்டல் குறி

உங்கள் கையில் இந்த சின்னம் இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தின் மீதும் மதத்தின் மீதும் அதிக நாட்டம் இருக்கும்.

உங்களுக்கு உங்களுடைய மதத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கும் அதேசமயம் மற்றவர்களை எப்பொழுதும் நேர்மறையாக அணுகுவீர்கள்.

மீன்

இந்த சின்னம் உங்கள் கையில் இருப்பது உங்களுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டமாகும்.

இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் வாழ்க்கையில் நல்லதை மட்டுமே செய்வார்கள். ஆன்மீகத்திலும் உங்களுக்கு அதிக நாட்டம் இருக்கும்.

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி சின்னம் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் சிறந்த தலைவராக இருப்பீர்கள், அதேசமயம் மற்றவர்களுடன் சேர்ந்து சிறப்பாக வேலை செய்ய கூடியவராக இருப்பீர்கள்.

மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுவீர்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்