உங்க கைல இந்த துரதிர்ஷ்ட ரேகை இருக்கா? அதிர்ஷ்டமே இல்லையாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

நமது கைகளில் உள்ள ரேகையைக் கொண்டே நமக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தையும், துரதிஷ்டத்தையும் சொல்ல முடியும்.

சிலருக்கு துரதிர்ஷ்ட ரேகைகள் உங்கள் கைகளில் அமைந்து இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் என்பது கிடையாது என்று கைரேகை ஜோதிடம் சொல்கின்றது.

இதை வைத்தே உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கணிக்க இயலும்.

கைரேகை நிபுணர்கள் 8 அதிர்ஷ்டமின்மை ரேகைகளை பற்றி கூறுகின்றனர். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

படத்தில் காட்டியவாறு பிரதான ரேகையின் மத்தியில் பிளவுபட்ட ரேகைகள் செல்வது அதிர்ஷ்டமின்மையின் அறிகுறியாகும். இப்படி காணப்பட்டால் அவர்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க கூடும். இதுவே அவர்களின் திருமண ரேகையில் பிளவுகள் தென்பட்டால் திருமண வாழ்க்கை சிக்கலாகவும், டைவர்ஸ் வாங்கவும் வாய்ப்புள்ளது.

இந்த பிளவுபட்ட ரேகைகள் நமக்கு விபத்து ஏற்படுதல், அபாய சூழ்நிலை, இயற்கை பேரழிவு, உடல் நலமின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதையும் காட்டுகிறது.

மற்றொரு கையில் உங்கள் இதய ரேகையில் பிளவு காணப்பட்டால் உங்கள் குடும்ப, காதல் வாழ்வில் பின்னடைவு அடைவீர்கள்.

படத்தில் காட்டியுள்ளவாறு சின்ன சின்ன கோடுகளாக ஒன்று சேர்ந்து ரேகை அமைந்து இருந்தால் அது சங்கிலி அமைப்பு என்கின்றனர்.

இந்த மாதிரியான அமைப்பு இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டமின்மை என்பதை காட்டுகிறது.

இது உங்களுக்கு கெட்டது நடக்கும் என்பதை காட்டுகிறது. உங்களுடைய தலை ரேகை இந்த மாதிரியான சங்கிலி தொடர் அமைப்பில் இருந்தால் மூளை சம்பந்தமான நோயால் பாதிக்கப்படுவீர்கள் என்பதை காட்டுகிறது.

கைரேகை ஜோதிடப்படி சிறிய தீவு போன்ற அமைப்பு ஆக்கத்தையும் அழிவையும் குறிக்கிறது. அதுவும் இந்த தீவு அமைப்பு பிரதான ரேகையில் அமைந்து இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்காதாம்.

இந்த தீவு உங்கள் தலை ரேகையில் அமைந்து இருந்தால் உங்களுக்கு ஞாபக மறதி ஏற்படுமாம். அதுவே விதி ரேகையில் அமைந்து இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பீர்கள்.

உங்கள் உள்ளங்கைகளில் இது போன்று நிறைய தீவுகள் இருந்தால் இந்த மாதிரி ஏராளமான பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் இது போன்று கருப்பு திட்டுகள் காணப்பட்டால் உங்கள் ஆற்றல் திறன் குறையும்.

இந்த திட்டுகள் உங்களுக்கு வரப்போகும் நெருக்கடி, தீவிர உடல் நல பாதிப்பு, விபத்து போன்றவற்றை காட்டுகிறது.

இந்த மாதிரியான கருப்பு திட்டுகள் இதய ரேகையில் காணப்பட்டால் நீங்கள் உணர்ச்சி கொந்தளிப்பால் பாதிப்படைவீர்கள்.

பிரதான ரேகையில் இருந்து கீழ்நோக்கி ஒரு ரேகை தென்பட்டால் நீங்கள் ஒரு துரதிர்ஷ்டவாதி ஆவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை காட்டுகிறது.

அதுவே இந்த கீழ்நோக்கிய ரேகை உங்கள் வாழ்க்கை ரேகையில் இருந்து ஆரம்பித்தால் அவ்வளவு சிக்கிரமாக பிரச்சினைகளை தீர்த்து பழைய நிலைக்கு வர இயலாது. அதுமட்டுமல்ல நடுத்தர வயதில் நிறைய உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

சில சமயங்களில் சனி மேட்டில் நடுவிரலுக்கு கீழே வளையம் போன்ற அமைப்பு காணப்படும். இதுவு‌ம் அஅதிர்ஷ்டமின்மையை காட்டுகிறது.

இது உங்களுக்கு சிறை தண்டனை, தடைகள், ஏமாற்றம் இன்னும் பலவற்றை குறிக்கிறது. மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்பதை காட்டுகிறது.

இவர்களுக்கு வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பது தெரியாது.

படத்தில் காட்டியுள்ளவாறு ரேகையில் நிறைய கிளைகள் தென்பட்டால் அதிர்ஷ்டமின்மையை காட்டுகிறது. இது உங்களுக்கு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என்பதை காட்டுகிறது. நீங்கள் எப்பொழுதும் சோர்வாக இருப்பதையும் தனிமையையும் காட்டுகிறது.

படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் வலை போன்ற அமைப்பு தென்பட்டால் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்கும் என்பதை காட்டுகிறது.

இதுவும் அதிர்ஷ்டமின்மையின் அடையாளம். உங்களுக்கு வரும் தடைகள், சிக்கல்களைக் குறிக்கிறது. புதன் மேட்டில் இந்த வலை ரேகை தென்பட்டால் உங்கள் திருமண வாழ்க்கை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்.

உங்கள் தாம்பத்ய வாழ்க்கையும் பாதிக்கப்படும். மேற்கண்ட ரேகை அமைப்பை கொண்டு உங்கள் அதிர்ஷ்டமின்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்