ஹாலிவுட் பாட பாணியில் பிரமாண்டமாக விருந்து நடத்திய அம்பானி குடும்பம்! ஆச்சர்ய வீடியோ

Report Print Vijay Amburore in வாழ்க்கை முறை

ஆகாஷ் அம்பானி மற்றும் ஷோலகா மேத்தாவின் திருமணம் மார்ச் 9-ம் திகதி நடைபெற உள்ளதை ஒட்டி ஹாரிபாட்டர் பட பாணியில் பிரமாண்டமாக விருந்து கொடுத்துள்ளனர்.

ஆகாஷ் அம்பானி - ஷோலகா மேத்தாவின் திருமணம் என்பது சாதாரணமான ஒன்று அல்ல. உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் திருமணம்.

சமீபத்தில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 2018-ம் ஆண்டிற்கான உலகின் டாப் 20 மில்லியனர் வரிசையில் அம்பானியும் இடம்பிடித்திருந்தார்.

வருகின்ற மார்ச் 9-ம் திகதி தான் திருமணம் நடைபெற உள்ளது. இதில் இந்திய மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் உள்ள பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியை மட்டுமே ஹாரிபாட்டர் பட பாணியில் பிரமாண்டமாக நடத்தியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகளானது தற்போது இணையதளத்தில் வெளியானதை அடுத்து பலரும் வாய் பிளந்து வியந்து பார்த்து வருகின்றனர்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்